Viji Chandrasekhar daughter marriage: கேப்டன் மில்லர் அம்மா.. விஜி சந்திரசேகர் மகள் திருமண விழா!
சென்னை: நடிகர் ரஜினிகாந்தின் தில்லு முல்லு படத்தில் தங்கையாக நடித்து சினிமாவில் அறிமுகமான விஜி சந்திரசேகர் இந்த பொங்கலுக்கு தனுஷ் நடித்த கேப்டன் மில்லர் படத்தில் கடைசியாக நடித்துள்ளார். நடிகை சரிதாவின் தங்கையான விஜி சந்திரசேகர் பல படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இந்நிலையில், அவரது மூத்த மகள் சுரக்ஷாவின் திருமணம் கோலாகலமாக நடைபெற்றுள்ளது.
நடிகர்கள் சூர்யா, அருண் விஜய், மீனா, ராதிகா சரத்குமார், விஜயகுமார், கலா மாஸ்டர், சமுத்திரகனி என பல திரை பிரபலங்கள் நேரில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் தீயாக பரவி வருகின்றன.

சரிதாவின் தங்கை: ரஜினிகாந்த், பாக்கியராஜ் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை சரிதா. கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். சரிதாவின் தங்கை விஜி சந்திரசேகர் கே. பாலசந்தர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த தில்லு முல்லு படத்தில் அவருக்கு தங்கையாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பல ஆண்டுகளாக நடித்து வரும் விஜி சந்திரசேகருக்கு சுரக்ஷா, லவ்லீன் என இரு மகள்கள் உள்ளனர்.
விஜி சந்திரசேகர் மகள் திருமணம்: நடிகை விஜி சந்திரசேகரின் மூத்த மகளான சுரக்ஷாவுக்கும் தொழிலதிபர் ஒருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. தமிழ் சினிமாவின் பல முன்னணி நடிகர்கள் அந்த திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தி உள்ளனர். அதன் புகைப்படங்கள் தற்போது ஒவ்வொன்றாக வெளியாகி வருகின்றன.

சூர்யா முதல் சமுத்திரகனி வரை: சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் விஜி சந்திரசேகர் நீதிபதியாக நடித்திருப்பார். விஜி சந்திரசேகர் மகள் திருமணத்தில் நடிகர் சூர்யா கலந்து கொண்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், நடிகர் சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர்.
கேப்டன் மில்லர் தனுஷ் வரல: அயோத்தியில் ராமர் கோயில் திறப்பு விழாவுக்காக சென்ற நடிகர் தனுஷ் சென்னையில் நடைபெற்ற விஜி சந்திரசேகர் மகள் திருமண விழாவில் கலந்து கொள்ளவில்லை எனக் கூறப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு வெளியான கேப்டன் மில்லர் படத்தில் சிவராஜ்குமார் மற்றும் தனுசுக்கு அம்மாவாக விஜி சந்திரசேகர் நடித்திருந்தார்.

ராதிகா முதல் மீனா வரை: நடிகைகள் ராதிகா, மீனா, கலா மாஸ்டர், லக்ஷ்மி ராமகிருஷ்ணன் என பல பிரபலங்கள் விஜி சந்திரசேகர் மகள் திருமணத்தில் கலந்து கொண்டனர். அப்பா விஜயகுமார் உடன் மகன் அருண் விஜய்யும் திருமண விழாவில் கலந்து கொண்ட புகைப்படங்களும் தீயாக பரவி வருகின்றன.


Click it and Unblock the Notifications











