துணிவே துணை.. கருப்பு படத்துக்காக தலையை அடமானம் வைத்த சூர்யா.. அள்ளுவது எத்தனை கோடிகள் தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த 15ஆம் தேதி வெளியான கருப்பு படம் இந்த ஆண்டில் இதுவரை ரிலீஸ் ஆன தமிழ் படங்களில் அதிக வசூலை அள்ளிய படமாக மாறப்போகிறது. இப்படி இருக்கையில் இந்த படத்தின் ரிலீஸ்க்காக நடிகர் சூர்யா கடைசி நேரத்தில் எடுத்த சில அதிரடியான முடிவுகள் தற்போது அவருக்கு பெரும் லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது என்ற பேச்சுதான் திரை உலகில் பரவலாக பேசப்பட்டு வரும் தகவலாக உள்ளது.
அதாவது கருப்பு படம் மே 14ஆம் தேதி ரிலீஸ் ஆவதாக இருந்தது. ஆனால் படம் சில பல நிதி நெருக்கடி காரணங்களால் ரிலீஸ் ஆகவில்லை. இது மட்டும் இல்லாமல், படத்தை ரிலீஸ் செய்ய சுமார் 50 கோடிகள் வரை பணம் தேவைப்பட்டதால், அதை தயாரிப்பாளரால் புரட்டமுடியாத சூழல் ஏற்பட்டதால், மொத்த படக்குழுவும் அடுத்த என்ன என்ற கேள்வியில் திகைத்து நின்றனர்.

துணிவே துணை: இப்படியான சூழலில் படத்தை ரிலீஸ் செய்ய தனது சம்பளத்தை விட்டுக் கொடுத்து, அந்த பணத்தை ரிலீஸ்க்காக பயன்படுத்தி, நடிகர் சூர்யாவே தமிழ்நாடு முழுவதும் ரிலீஸ் செய்ய முடிவெடுத்தார். அதாவது சம்பளத்தில் இருந்து ரூபாய் 50 கோடியை கொடுத்து தமிழ்நாடு ரிலீஸ் உரிமையை வாங்கிக் கொண்டுள்ளார். தற்போது படம் சக்கை போடு போட்டு வருவதால், படம் எப்படியும் தமிழ்நாட்டில் மட்டும் சுமார் 150 கோடிகள் வரை வசூலிக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும், இதில் ஷேர் மட்டும் ரூபாய் 60 கோடிகள் வரை வரும் என்பதால், அதில் ரிலீஸ் செய்யப்பட்டதற்கான கமிஷன் போக சூர்யாவுக்கு எப்படியும் ரூபாய் 55 கோடிகள் வரை கிடைக்கும் என்றும் வலைப்பேச்சு பிஸ்மி தெரிவித்துள்ளார். இதைக் கேள்விப்பட்ட பலரும், தனது படத்தின் மீது சூர்யாவே நம்பிக்கை வைக்கவில்லை என்றால் எப்படி, துணிவே துணை என்பது போல சூர்யா எடுத்த முடிவு அவருக்கு நல்ல லாபத்தை ஈட்டிக் கொடுத்துள்ளது என்றும் பேசி வருகிறார்கள்.
வசூல் வேட்டை: கருப்பு படம் தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் அண்டை மாநிலங்களான கேரளம், ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடகாவிலும் சக்கை போடு போட்டு வருவதால், பல ஆண்டுகளுக்குப் பின்னர் சூர்யாவுக்கு இந்த படம் மிகவும் பிரமாண்டமான தியேட்டரிக்கல் வெற்றி என்பதால் ரசிகர்கள் மற்றும் சூர்யா, கருப்பு படக்குழுவினர் உள்ளிட்ட பலரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications