twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    தமிழ் சினிமாவின் பேரழகன், கர்ஜிக்கும் சிங்கத்துக்கு 43 வயது ஆகிவிட்டது!

    |

    சென்னை: நடிகர் சூர்யாவின் 43 வது பிறந்தநாளான இன்று, அவர் கடந்து வந்த பாதையை நினைவுகூறலாம்.

    "எட்டித்தொடும் வயது இது ஒரு பட்டாம்பூச்சி போல் இருக்கும்...

    அதிசயம் என்னவென்றால் அதில் இருமுனை கூரிருக்கும்...!"

    என்று அயன் திரைப்படத்தில் வரும் பாடல் வரிகள் அவரின் வாழ்வோடு ஒன்றிப்போகின்றன.

    ஓர் மாபெரும் நடிகரின் பிள்ளையாக சினிமாக் கனவுகளை எட்டித்தொடும் தூரத்தில் தான் இருந்தார். ஆனால் அதை அவர் செய்யவில்லை. தந்தை சிவக்குமாரும் அவருக்கு அந்த வாய்ப்பை பெற்றுக்கொடுக்கவில்லை.

    "அதில் இருமுனை கூர் இருக்கும்" என்பதுபோல, பெரிய நடிகரின் பிள்ளை என்று அறிமுகமாகும்போது அவரின் பெயருக்கு கலங்கம் வரக்கூடாது. அவரை விட நன்கு சோபிக்க வேண்டும் என்பதே இவ்வுலம் எதிர்பார்க்கும் எதார்த்தம்.

    அதற்கு ஏற்றாற்போல், துணிகளை ஏற்றுமதி செய்யும் நிறுவனத்தில் பணியாற்றிவிட்டு நேருக்கு நேராக மோதிப்பார்க்கலாம் என சினிமாவுக்கு வந்தார். ஒவ்வொரு அடியிலும் பல சறுக்கல்களை சந்தித்து சூர்யா என்ற நடிகனை பாலாவின் நந்தா திரைப்படம் அடையாளம் காட்டியது.

    நேருக்கு நேர், ஃபிரெண்ட்ஸ், உன்னை நினைத்து போன்ற படங்களில் பெரிதாக முக பாவனைகள் காட்டாத கன்னி நடிகனாக இருக்கும் சூர்யா இன்றும் தனி அழகாகக் தெரிவார்.

    சிறப்பு

    சிறப்பு

    "மெஷின் ரிப்பேர் ஆகாமல் ஓடிக்கொண்டிருக்கும்போது யாருமே கவலைப்பட மாட்டோம், ஆனால் ஒருமுறை ரிப்பேர் ஆகி சரி செய்துவிட்டால், மீண்டும் எப்போது ரிப்பேர் ஆகுமோ என கவலையாக இருக்கும்". இது உன்னை நினைத்து திரைப்படத்தில் லைலாவிடம் சூர்யா பேசும் வசனம். தன்னை வேண்டாம் என்று நிராகரித்து மீண்டும் வேண்டுமென எதிர்பார்க்கும் ஒரு பெண்ணை சாதூர்யமாகவும் பக்குவமாகவும் கையாளும் நடிப்பு சூர்யாவிடம் காணமுடியும்.

    நடிப்பு

    நடிப்பு

    பெண் சகவாசமே வேண்டாம் என்று முரண்டுபிடிப்பவன் காதல் வந்ததும் தலைகீழாய் மாறுவதற்கு "மௌனம் பேசியதே" படம் ஒரு எடுத்துக்காட்டு. துரு துரு கல்லூரி மாணவன், துடிப்பான இளைஞன், நல்ல காதலன், நல்ல கணவன், அன்பான அப்பா என்று அனைத்து பாத்திரங்களும் கன கச்சிதமாக பொருந்தியிருக்கும் திரைப்படம் என்றால் "சில்லுன்னு ஒரு காதல்" எனச் சொல்லலாம்.

    பாலிவுட்

    பாலிவுட்

    மாதவன், சித்தார்த் என மற்ற இரண்டு நாயகர்கள் படத்தில் இருந்தாலும் தனக்கு ஒதுக்கப்பட்ட பாத்திரத்தை மிகச்சிறப்பாக செய்திருப்பார் ஆயுத எழுத்து திரைப்படத்தில். தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் நல்ல வரவேற்பை பெற்ற சூர்யா ரத்த சரித்திரம் திரைப்படம் மூலம் இந்தியிலும் காலடி வைத்துள்ளார். வித்தியாசமான கெட்டப் மற்றும் மாறுபட்ட கதைக்களத்தையே சூர்யா எப்போதும் தேடுவார். நந்தா, பேரழகன், கஜினி, வாரணம் ஆயிரம், ஏழாம் அறிவு, 24 என பட்டியலிடலாம்.

    வணிகம்

    வணிகம்

    சமகால நடிகர்களில் சினிமாவின் கலைத்தாகம் குறையாமலும், வணிக ரீதியாக வெற்றியைக் கொடுக்கும் நடிகர்களில் முக்கிமானவராக சூர்யா இருக்கிறார். இன்னும் நெறைய கத்துக்கணும் என்று தன்னடக்கத்தோடு பேசும் இவரிடமிருந்து கற்றுக்கொள்ள நிறைய உண்டு. சினிமா, கலைப்பணி, பொதுநலன் என்று பல உயரிய குறிக்கோள்களுடன் பயணித்து வரும் சூர்யாவின் உயரத்தை விமர்சிக்கும் சிலரால் இவர் அடைந்திருக்கும் உயரத்தையும், கொண்டிருக்கும் உயர்ந்த உள்ளத்தையும் அளவிட முடியாது என்பதே உண்மை!

    English summary
    Actor Surya celebrates his 43rd birthday today. He never used his father influence to introduce himself in the field. He is one of the notable actors who balances art and commercial cinema well.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X