அங்கிட்டு ஒன்னு.. இங்கிட்டு ஒன்னு.. ஒரே நேரத்தில் இரண்டு.. சூர்யா செம பிசி!
சென்னை : சிறப்பான நடிப்பால் பலராலும் பாராட்டப்படும் நடிகரான சூர்யா தற்போது டைரக்டர் பாண்டிராஜ் இயக்கும் சூர்யா 40 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்காக நீளமான முடியுடன் புதிய லுக்கிற்கு மாறி உள்ளார் சூர்யா. சமீபத்தில் படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சூர்யாவின் ஃபோட்டோக்கள் வைரலாகின.
லேட்டஸ்ட் தகவலாக சூர்யா 40 படத்துடன் , தனது சொந்த தயாரிப்பில், கூட்டத்தில் ஒருவன் படத்தை இயக்கிய டைரக்டர் டிஜெ ஞானவேல் இயக்கும் புதிய படம் ஒன்றில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் வேலைகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

சூர்யா 40 படத்தின் சூட்டிங் மதுரையில் நடக்கிறது. அடுத்தகட்டமாக கொடைக்கானலில் படப்பிடிப்பு நடத்தப்பட உள்ளது. இந்த படத்தில் சூர்யா, வக்கீல் கேரக்டரில் நடிக்கிறார். பழங்குடி மக்களை அடிப்படையாகக் கொண்டது தான் இந்த படத்தின் கதை.
முக்கியமான காரணங்களுக்காக போராடும் நபராக சூர்யா நடித்துள்ளார். அடுத்த சில நாட்களில் இப்படத்தின் சூட்டிங்கிற்காக சூர்யா கொடைக்கானல் செல்ல உள்ளார். மீண்டும் மதுரைக்கு திரும்பி வந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பை சூர்யா துவங்க உள்ளார்.
பாண்டிராஜ் இயக்கத்தில் சூர்யா முதல் முறையாக நடிக்கும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், சரண்யா பொன்வண்ணன், தேவதர்ஷினி, ஜெயபிரகாஷ், இளவரசு உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்.


Click it and Unblock the Notifications











