twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நடிகர் கார்த்தியை தொடர்ந்து EIAவிற்கு சூர்யா எதிர்ப்பு!

    |

    சென்னை: நடிகர் கார்த்தியை தொடர்ந்து அவரது அண்ணனும் முன்னணி நடிகருமான சூர்யா, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிகள் 2020 வரைவு சட்டம் தொடர்பாக தனது கருத்தை ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

    Recommended Video

    EIA 2020 வரைவுக்கு நடிகர் கார்த்தி, சூர்யா கண்டனம் #AbortEIA2020

    உழவன் பவுண்டேஷன் என்ற அமைப்பை நடத்தி வரும் நடிகர் கார்த்தி, இயற்கை வளங்களை வளர்ச்சி திட்டங்களுக்காக அழிக்க நேரிட்டால், மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டிய அவசியமில்லை என்ற ரீதியில் உருவாக்கப்பட்டுள்ள EIA 2020க்கு எதிராக நேற்று ஒரு நீண்ட அறிக்கையை வெளியிட்டு இருந்தார்.

    இந்நிலையில், அந்த அறிக்கையை ஷேர் செய்த சூர்யா, EIAவுக்கு எதிரான தனது நிலைப்பாட்டையும் பதிவு செய்துள்ளார்.

    என்ன பிரச்சனை

    என்ன பிரச்சனை

    இயற்கை வளங்களை அழித்து, அதை வளர்ச்சியின் அடையாளமாகக் காட்டுவது வருங்கால தலைமுறையின் எதிர்காலத்தை கேள்விகுறியாக்கும் முயற்சி. அதை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு, ஒரு போதும் அனுமதிக்கக் கூடாது. இந்த வரைவு அறிக்கையில் 'பல முக்கிய திட்டங்களை மக்கள் கருத்து கேட்பு மற்றும் பொது ஆலோசனைகள் இல்லாமலேயே நிறைவேற்றலாம்' என்கிற ஒரு சரத்தே, நம் உள்ளத்தில் மிகப்பெரிய அவநம்பிக்கையையும் அச்சத்தையும் உருவாக்குகிறது என நடிகர் கார்த்தி நேற்று வெளியிட்ட இருந்த அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.

    ஏன் அவசரம்?

    ஏன் அவசரம்?

    நாட்டிற்கான முன்னேற்றங்கள் தேவை என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை. ஆனால் கோவிட்-19 எனும் அரக்கப் பிடியில் நாம் அனைவரும் சிக்கி, மீளப் போராடிக்கொண்டிருக்கும் இந்த வேளையில் நம் வாழ்வாதாரத்தையும் முக்கியமாக நமது வரும் சந்ததியினரின் வாழ்வையும் நிர்ணயிக்கக் கூடிய சக்தியுள்ள இந்தச் சட்டத்தை எதற்காக இவ்வளவு அவசரமாக நிறைவேற்ற வேண்டும்? என்ற கேள்வியையும் முன் வைத்து இருந்தார்.

    காக்க.. காக்க. சுற்றுச்சூழல் காக்க

    காக்க.. காக்க. சுற்றுச்சூழல் காக்க

    நடிகர் கார்த்தியின் அந்த அறிக்கை நேற்று விவாதப் பொருளாக மாறிய நிலையில், தற்போது, நடிகர் சூர்யா, தனது ட்விட்டர் பக்கத்தில், "பேசிய வார்த்தைகளை விட, பேசாத மௌனம் மிக ஆபத்தானது. காக்க.. காக்க.. சுற்றுச்சூழல் காக்க.. நம் மௌனம் கலைப்போம்.." என அந்த அறிக்கையை ஷேர் செய்து EIAவிற்கு எதிரான தனது கருத்தை பதிவிட்டுள்ளார்.

    ரசிகர்கள் ஆதரவு

    ரசிகர்கள் ஆதரவு

    நடிகர்களான சூர்யாவும், கார்த்தியும் இது தொடர்பாக குரல் எழுப்பி உள்ள நிலையில், அவர்களது ரசிகர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். நடிகர் கார்த்தி சொன்னது போல, [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் ஆகஸ்ட் 11, 2020 தேதிக்குள் தங்கள் கருத்துக்களை பதிவிடவும் முடிவு செய்துள்ளனர்.

    Read more about: suriya சூர்யா
    English summary
    After actor Karthi, now his brother and actor Suriya tweeted about EIA 2020. He said, be silenced in this situation is very worst.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X