Vijayakanth - விஜயகாந்த் நலம் பெற வேண்டும்.. கோடான கோடி பேர்களில் நானும் ஒருவன்.. சூர்யா ட்வீட்

சென்னை: Vijayakanth (விஜயகாந்த்) விஜயகாந்த் நலம் பெற பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன் என சூர்யா ட்வீட் செய்திருக்கிறார்.

விஜயகாந்த் தமிழ் சினிமா ரசிகர்களால் கேப்டன் என்று அழைக்கப்படுகிறார். 100 படங்களுக்கும் மேல் நடித்து ரஜினிகாந்த், கமல் ஹாசன் ஆகியோருக்கு டஃப் கொடுத்து முன்னணி ஹீரோவாக வலம் வந்த அவர் திரையுலகில் ஏகப்பட்ட நல்ல விஷயங்களை செய்திருக்கிறார். குறிப்பாக நடிகர் சங்க தலைவராக இருந்து சங்கத்தின் கடனை அடைத்தவரும் அவரே.

 Suriya Tweets about Actor Vijayakanth Health Issue

அரசியல் என்ட்ரி: நடிகராக உச்சத்தில் இருந்த விஜயகாந்த் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய இரண்டு பேருமே அரசியலில் ஆக்டிவ்வாக இருந்தபோதே அரசியலுக்கு வந்து முதல் தேர்தலிலேயே தனித்து போட்டியிட்டு கணிசமான வாக்குகளை பெற்றார். இதனால் அரசியல் தளத்திலும் கவனிக்கப்படும் மனிதராக மாறினார் விஜயகாந்த்.

எதிர்க்கட்சி தலைவர்: 2011ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கட்சி தலைவராக மாறினார். பிறகு சில தவறான முடிவுகளால் அடுத்தடுத்த தேர்தல்களில் அவரது கட்சி வெல்ல முடியாமல் போனது. கூடவே விஜயகாந்த்துக்கு உடல்நிலையும் சரியில்லாமல் போய் அமெரிக்காவில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.

முழு ஓய்வு: அறுவை சிகிச்சை செய்து முடிக்கப்பட்ட பிறகு முழு ஓய்வில் இருந்துவரும் விஜயகாந்த் அவ்வப்போது தொண்டர்களை சந்திப்பதை வழக்கமாக வைத்திருந்தார். இந்த சூழலில் அவருக்கு உடல்நிலை மீண்டும் பாதிக்கப்பட்டதால் கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சூழலில் அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்துவிட்டதாக தகவல்கள் பரவ; அவரது மனைவி அதை மறுத்து வீடியோ வெளியிட்டார். எனவே விஜயகாந்த் விரைவில் பூரண உடல்நலம் பெற வேண்டும் ரசிகர்களும், தேமுதிக தொண்டர்களும் வேண்டுதல் செய்துவருகின்றனர்.

சூர்யா ட்வீட்: இந்நிலையில் நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “அண்ணன் விஜயகாந்த் அவர்கள் நலம் பெறப் பிரார்த்திக்கும் கோடான கோடி இதயங்களில் நானும் ஒருவனாகப் பங்கேற்கிறேன்.! கோடானகோடி மனிதர்களின் வேண்டுதல்கள் நிச்சயம் பலிக்கும்.! அவரை பூரண குணமாக்கி, நலம் பெற வைக்கும்” என பதிவிட்டிருக்கிறார். விஜயகாந்த்தும், சூர்யாவும் பெரியண்ணா படத்தில் இணைந்து நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X