Suriya Jyotika: ஜோதிகாவை தொந்தரவு செய்த ரசிகர்.. கையைப் பிடித்து இழுத்த சூர்யா.. அச்சச்சோ என்னாச்சு?

சென்னை: நடிகர் சூர்யா அவரது மனைவி மற்றும் நடிகையான ஜோதிகா தம்பதியர் இன்று அதாவது ஆகஸ்ட் 4 ஆம் தேதி திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் தரிசனம் செய்துவிட்டு வந்தார்கள். அப்போது ரசிகர்கள் அவர்களுடன் புகைப்படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்டு சூர்யாவுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தியதால் அவர் கடுப்பானார். இதனால் ரசிகர்களை நோக்கி கோபமாக பேசினார். இது தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

நடிகர் சூர்யாவின் அகரம் பவுண்டேஷனின் 15 வது ஆண்டு விழா சென்னையில் நேற்று மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அகரம் பவுண்டேஷன் மூலம் கல்வி உதவி பெற்றவர்கள் தொடங்கி அகரத்திற்கு துணை நின்ற பலரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்கள். இந்த நிகழ்ச்சி தொடர்பான காட்சிகள் இப்போதும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்களும் இணையவாசிகளும் சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினரை பாராட்டி வருகிறார்கள்.

Suriya Very Upset and Angry For Fans Disturbing To Jyotika and His Kids
Photo Credit:

அகரம்: சூர்யாவின் மகள் தியா மகன் தேவ் ஆகியோர் தங்களுக்கு செலவுக்காக அவரது பெற்றோர்கள் கொடுக்கும் பாக்கட் மணியை மாதம் 300 என்ற அகரம் நிதி உதவித் திட்டத்திற்கு நன்கொடையாக வழங்கி வருகிறார்கள் என்ற தகவலை நடிகரும் சூர்யாவின் தம்பியுமான கார்த்தி அகரம் பவுண்டேஷன் 15 வது ஆண்டு விழாவில் பேசும்போது குறிப்பிட்டார். சிவக்குமார். அவரது மகன்கள் சூர்யா - கார்த்தி, தற்போது சூர்யாவின் மகள் தியா மற்றும் மகன் தேவ் என மூன்று தலைமுறையும் ஏழை மாணவர்களின் கல்விக்கு தொடர்ந்து உதவி வருகிறார்கள் என பலரும் பாராட்டி வருகிறார்கள்.

திருப்பதியில் தரிசனம்: இந்நிலையில் இன்று சூர்யா, ஜோதிகா மற்றும் அவர்களின் குழந்தைகள் திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலுக்கு தரிசனம் செய்யச் சென்றிருந்தனர். தரிசனம் முடித்துவிட்டு வெளியே வரும் போது அங்கிருந்த பக்தர்கள் சூர்யா மற்றும் ஜோதிகாவுடன் புகைப்படம் எடுக்க போட்டி போட்டுக் கொண்டு இருந்தார்கள். சூர்யா வழக்கமாகவே தான் மட்டும் வந்தால் ரசிகர்களுடன் மகிழ்ச்சியுடன் புகைப்படம் எடுத்துக் கொள்வார். ஆனால் குடும்பத்தினருடன் வந்திருந்தால், அவர்களுக்கு தன்னால் எந்தவிதமான அசௌகரியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காக மிகவும் கவனமாக இருப்பார்.

Suriya Very Upset and Angry For Fans Disturbing To Jyotika and His Kids
Photo Credit:

கடுப்பான சூர்யா: ஆனால் இன்றைக்கு ரசிகர்கள் நீண்ட நேரமாக சூர்யாவுடன் புகைப்படம் எடுத்து வந்தனர். இதனால் ஒரு கட்டத்தில் சூர்யா கடுப்பாகி, போதும்.. போதும்.. குடும்பத்துடன் வந்திருக்கேன்.. அவர்களை தொந்தரவு செய்ய வேண்டாம். நிறைய போட்டோ எடுத்தாச்சு என்று கோபமாக கூறினார். ரசிகர் ஒருவர் ஜோதிகா பின்னாடியே சென்று அவருடன் புகைப்படம் எடுக்க தொந்தரவு செய்து கொண்டு இருந்தார். உடனே சூர்யா அவரது கையைப் பிடித்து இழுத்து விட்டார் . இந்த காட்சிகளும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக இணையவாசிகள் பலரும், ரசிகர்கள் ஏன் தான் இப்படி செய்கிறார்களோ என்று விமர்சித்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X