9 கதைகள்.. 9 இயக்குநர்கள்.. சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி.. நெட்பிளிக்ஸின் நவரசா!
சென்னை: முதன் முறையாக சூர்யா நடித்துள்ள ஆந்தாலஜி திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஒடிடி தளத்தில் வெளியாகவிருக்கிறது.
9 இயக்குநர்கள் இயக்கத்தில் 9 கதைகள், 9 விதமான எமோஷன்களை நவரசா டைட்டிலில் கொட்டித் தீர்க்க வருகிறது.
குட்டி ஸ்டோரி படத்தைத் தொடர்ந்து விஜய்சேதுபதி இந்த ஆந்தாலஜியில் நடித்துள்ளார்.

மணிரத்னம் தயாரிப்பில்
பொன்னியின் செல்வன் எனும் பிரம்மாண்ட படத்தை இயக்கி வரும் இயக்குநர் மணிரத்னம் தயாரிப்பில் உருவாகி உள்ளது நவரசா ஆந்தாலஜி. 4 கதை, 5 கதை எல்லாம் இல்லைங்க, ஒட்டுமொத்தமாக 9 கதைகள். நெட்பிளிக்ஸில் விரைவில் மூவி மராத்தானை காண தயாராகுங்கள். மணிரத்னமுடன் இணைந்து ஜெயேந்திர பஞ்சாபகேசன் இந்த ஆந்தாலஜியை தயாரித்துள்ளார்.

கமலும் காதம்பரியும்
காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை தொடர்ந்து மீண்டும் சூர்யாவுடன் இணைந்துள்ளார் கெளதம் மேனன். துருவ நட்சத்திரம் படத்திலேயே இணைய வேண்டிய இவர்கள், சில கதை பிரச்சனை காரணமாக விலகினர். இந்நிலையில், கமலும் காதம்பரியும் எனும் அரை மணி நேர படத்தை சூர்யாவை வைத்து கெளதம் மேனன் இயக்கி உள்ளார். ஆந்தாலஜி பண்ண போறோம் என முடிவெடுத்தாலே கெளதம் மேனனை அழைத்து விடுகின்றனர். தற்போது சூர்யாவின் நவரசா லுக் வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

9 இயக்குநர்கள்
அரவிந்த் சாமி, பிஜோய் நம்பியார், கெளதம் மேனன், ஹலிதா ஷமீம், கே.வி. ஆனந்த், கார்த்திக் சுப்புராஜ், பொன்ராம் மற்றும் ரதீந்திரன் ஆர். பிரசாத் உள்ளிட்ட 9 இயக்குநர்கள் இயக்கியுள்ள 9 எபிசோடுகள் நெட்பிளிக்ஸின் நவரசா எனும் ஆந்தாலஜி வெப்சீரிசாக விரைவில் வெளியாக உள்ளது.

நட்சத்திர பட்டாளம்
சூர்யா, விஜய்சேதுபதி, சித்தார்த், அரவிந்த் சாமி, பாபி சிம்ஹா, பிரகாஷ் ராஜ், கெளதம் கார்த்திக், அசோக் செல்வன், நித்யா மேனன், ரோபோ சங்கர், பார்வதி, அம்மு அபிராமி, பூர்ணா, விக்ராந்த், ஐஸ்வர்யா ராஜேஷ், அழகம் பெருமாள், ரித்விகா என நட்சத்திர பட்டாளமே இந்த 9 கதைகளில் நடித்துள்ளனர். கோலிவுட் ரசிகர்களுக்கு மிகப்பெரிய திரை விருந்தாக இந்த நவரசா வெளியாக உள்ளது.

குட்டி ஸ்டோரியை தொடர்ந்து
குட்டி ஸ்டோரியை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதியும் மீண்டும் ஒரு ஆந்தாலஜி படத்தில் நடித்துள்ளார். இயக்குநர் பிஜோய் நம்பியார் இயக்கத்தில் பிரகாஷ் ராஜ் மற்றும் ரேவதி உடன் இணைந்து மிரட்ட உள்ளார் விஜய் சேதுபதி. கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் படத்தில் பாபி சிம்ஹா நடித்துள்ளார்.

எத்தனை நல்லா இருக்கும்
தமிழ் சினிமாவில் ஆந்தாலஜி முறை ரசிகர்களுக்கு நியூ நார்மல் ஆகி விட்டது. ஆனால், தொடர்ந்து வெளியாகும் ஆந்தாலஜி வெப் சீரிஸ்களில் முதல் படமும் கடைசி படமும் மட்டுமே பார்க்கும் படியாக வைத்து விட்டு, ஏகப்பட்ட மொக்கை கதைகளை உள்ளே நுழைத்து ரசிகர்களை டென்ஷன் ஆக்கி விடுகின்றனர். இந்த நவரசாவில் 9 ரசமும் நல்லா இருக்குமா? இல்லை எத்தனை நல்லா இருக்கும் என்றும் ரசிகர்கள் கிண்டலடிக்க ஆரம்பித்து விட்டனர்.


Click it and Unblock the Notifications











