twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சூர்யா 38 படத்தை துவங்கும் முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்ற சூர்யா

    By Siva
    |

    Recommended Video

    Suriya 38 Movie Poojai: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 38- வீடியோ

    சென்னை: சுதா கொங்கரா படத்தில் நடிப்பதற்கு முன்பு அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார் சூர்யா.

    புதுப்படங்களை துவங்கும் முன்பும், பட ரிலீஸுக்கு முன்பும் பாலிவுட் பிரபலங்கள் அஜ்மீர் தர்காவுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளனர். இந்நிலையில் அந்த பட்டியலில் சூர்யா சேர்ந்துள்ளார்.

    சூர்யாவும், இயக்குநர் சுதா கொங்கராவும் அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளனர்.

    முஸ்லீம் பெண்ணை மணக்கும் சிம்பு தம்பி: ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன் முஸ்லீம் பெண்ணை மணக்கும் சிம்பு தம்பி: ஸ்டார் ஹோட்டலில் ரிசப்ஷன்

    சூர்யா

    சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கும் முன்பு சூர்யா ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அஜ்மீர் தர்காவுக்கு சென்றுள்ளார். சுதாவும், சூர்யாவும் தர்காவில் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன.

    ஸ்க்ரிப்ட்

    அஜ்மீர் தர்காவில் எடுக்கப்பட்ட புகைப்படங்களை பார்த்தால் சுதா கொங்கரா கையில் படத்தின் ஸ்க்ரிப்ட் இருப்பது தெரிகிறது. சூர்யா தலையில் கைக்குட்டையை கட்டிக் கொண்டு தர்காவில் நிற்கும் புகைப்படங்களை அவரின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.

    படப்பிடிப்பு

    சுதா கொங்கரா இயக்கும் படத்தின் படப்பிடிப்பு நாளை துவங்குகிறது. இந்நிலையில் ரசிகர்களின் அன்பும், ஆதரவும் கோரி ட்வீட் செய்துள்ளார் சூர்யா.

    அபர்ணா

    சூர்யா 38 படத்தின் பூஜை இன்று நடந்தது. அந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக சர்வம் தாளமயம் புகழ் அபர்ணா பாலமுரளி நடிக்கிறார். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    Read more about: suriya சூர்யா
    English summary
    Suriya has visited Ajmer Dargah before starting the shooting of his upcoming movie Suriya 38 to be directed by Sudha Kongara.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X