Don't Miss!
- Automobiles
பெட்ரோல் ஸ்கூட்டர்களுக்கு சவால் விடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை! டாப் 10 பட்டியல் இதோ!
- News
தீய சக்தி திமுகவை வீழ்த்த வலிமையான அதிமுக..ஓபிஎஸ் இபிஎஸ் ஒற்றுமை அவசியம்..சொல்கிறார் சி.டி.ரவி
- Finance
இன்ப அதிர்ச்சி கொடுத்த தங்கம் விலை..எவ்வளவு குறைந்திருக்கு பாருங்க.. இனியும் குறையுமா?
- Sports
டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்புவது எப்போது? ஹர்திக் பாண்டியா பளிச் பதில்..குறையை நிவர்த்தி செய்வாரா
- Lifestyle
இந்த 4 ராசிக்காரங்க ஒரே நேரத்தில் பலபேரை காதலிக்க வாய்ப்பிருக்காம்... இவங்கள லவ் பண்றவங்க உஷாரா இருங்க!
- Travel
த்ரில்லா ஒரு டூர் போகணும்ன்னு ஆசையா – இந்தியாவின் இந்த கைவிடப்பட்ட இடங்களுக்கு செல்லுங்களேன்!
- Technology
இந்த 5 போனை அடுச்சுக்க ஆளே இல்லை.! ரூ.10,000-ல் டாப் போன்கள் இவை தான்.!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
இது இனி என் குடும்பம்: உயிர் இழந்த ரசிகரின் குடும்ப பொறுப்பை ஏற்ற சூர்யா
Recommended Video

சேலம்: உடல் நலக்குறைவால் மரணம் அடைந்த ரசிகரின் வீட்டிற்கு சென்று ஆறுதல் கூறியுள்ளார் நடிகர் சூர்யா.
சூர்யாவும் சரி, கார்த்தியும் சரி ரசிகர்கள் மீது தனிப்பாசம் வைத்துள்ளனர். ரசிகர்களின் வீட்டில் ஏதாவது துக்க சம்பவம் நடந்தால் ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துவிட்டு வேலையை பார்க்கும் ஆட்கள் அவர்கள் இல்லை.
நேரில் சென்று ஆறுதல் கூறுவதுடன் தங்களால் முயன்ற உதவியையும் செய்து வருகின்றனர்.
ஜீரோ
ஷூட்டிங்கில்
தீவிபத்து..
அதிர்ஷ்டவசமாக
உயிர்
தப்பிய
ஷாரூக்!

ரசிகர்
சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்த மணிகண்டன்(35) என்பவர் டீக்கடையில் வேலை பார்த்து வந்தார். சூர்யா ரசிகர் மன்றத்தின் சேலம் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்த அவர் நுரையீரல் கோளாறால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில் அவர் கடந்த 13ம் தேதி சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.

சூர்யா
மணிகண்டன் மரணம் அடைந்தது குறித்து அறிந்த சூர்யா அவரின் குடும்பத்தாரை சந்தித்து ஆறுதல் கூற சேலத்திற்கு தனியாக காரில் சென்றார். பகலில் சென்றால் கூட்டம் கூடிவிடும் என்பதால் இரவு 10 மணி போன்று மணிகண்டன் வீட்டிற்கு சென்றார். மணிகண்டனின் மகளின் படிப்பு செலவை ஏற்ற சூர்யா இந்த குடும்பம் இனி என் குடும்பம், உங்களின் தேவைகளை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று வாக்குறுதி அளித்துள்ளார்.

எதிர்காலம்
மணிகண்டனை இழந்துவிட்டு பெண் குழந்தையை வைத்துக் கொண்டு இனி என்ன செய்யப் போகிறோம் என்று கவலையில் இருந்த அவரின் மனைவிக்கு சூர்யாவின் வாக்குறுதி நம்பிக்கை அளித்துள்ளது. சூர்யாவின் இந்த செயல் அவர் ரசிகர்கள் மட்டும் அல்ல பிற நடிகர்களின் ரசிகர்களையும் கவர்ந்துள்ளது.
|
ட்விட்டர்
சூர்யா மணிகண்டனின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறியபோது எடுத்த வீடியோவை அவரின் ரசிகர்கள் ட்விட்டரில் வெளியிட்டுள்ளனர்.