கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு மனைவி ஜோதிகாவுடன் சென்ற சூர்யா.. அந்த யாகத்தை செய்திருக்கிறாரா?
சென்னை: கங்குவா படத்தின் மீது மிகப்பெரிய நம்பிக்கையை சூர்யா மற்றும் அவரது குடும்பத்தினர் வைத்திருந்தனர். இந்த படத்தை இந்திய திரையுலகமே வாயை பிளந்துக் கொண்டு பார்க்கும் என சூர்யாவே படத்திற்கு மிகப்பெரிய கியாரண்டியை கொடுத்திருந்தார். ஆனால், படம் வெளியான பின்னர் படத்துக்கு எதிராக குவிந்த நெகட்டிவ் விமர்சனங்கள் காரணமாக கங்குவா படம் பெரிதாக ஓடவில்லை. பல ஏரியாக்களிலும் படம் நஷ்டத்தை சந்தித்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகையும் சூர்யாவின் மனைவியுமான ஜோதிகா கங்குவா படத்திற்கு எதிராக நெகட்டிவ் விமர்சனங்களை பரப்பியவர்களை கண்டித்து பதிவு ஒன்றை போட்டிருந்தார். கங்குவா படத்தை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக புரமோட் செய்து வந்த படக்குழுவினர் பலரும் தங்களின் எதிர்ப்புகளை காட்ட ஆரம்பித்தனர்.

தியேட்டர்களின் வெளியே ரசிகர்கள் என்கிற போர்வையில் நெகட்டிவ் விமர்சனத்தை கக்கும் நபர்களை ஊக்குவிக்கும் யூடியூப் சேனல்களின் பப்ளிக் விமர்சனத்திற்கே தடை போடும் அளவுக்கு இந்த கங்குவா விவகாரம் விஸ்வரூபம் எடுத்தது. சென்னை சோளிங்கரில் உள்ள யோக நரசிம்மர் கோயிலுக்கு சிறுத்தை சிவாவுடன் சென்று சாமி தரிசனம் செய்த சூர்யா தற்போது மனைவி ஜோதிகாவுடன் கொல்லூர் மூகாம்பிகையை வழிபட்டுள்ளார்.
சிறுத்தை சிவாவுடன் சாமி தரிசனம்: கங்குவா படத்தின் தோல்விக்கு இயக்குநர் சிறுத்தை சிவா தான் காரணம் என அவருடன் நடிகர் சூர்யா எந்தவொரு சண்டையும் போடவில்லை. நினைத்தது நடக்கவில்லை. அடுத்தது என்ன பண்ணலாம் என்கிற சிந்தனையில் சிறுத்தை சிவாவுடன் யோக நரசிம்மர் கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வந்தார் சூர்யா. அங்கே கேபிள் காரில் ஏறி ரசிகர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு மகிழ்ந்தார்.
மனைவியுடன் கோயிலுக்கு: கங்குவா படம் மிகப்பெரிய நஷ்டத்தை கொடுத்துள்ள நிலையில், சில கோயில்களுக்கு சென்று சில பரிகார பூஜைகளையும் சூர்யா செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்நிலையில், மனைவி ஜோதிகாவுடன் கர்நாடக மாநிலத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு நடிகர் சூர்யா சென்றுள்ள புகைப்படங்கள் தற்போது வெளியாகி இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

சண்டி யாகம்: நடிகர் சூர்யா கொல்லூர் மூகாம்பிகை கோயிலுக்கு ஜோதிகாவுடன் சென்ற நிலையில், அங்கே அவர் சண்டி யாகம் செய்துள்ளார் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன. வாழ்க்கையில் தொடர்ந்து வரும் தடைகளை தகர்க்க சண்டி யாகத்தை மக்கள் நம்பிக்கையுடன் செய்து வருகின்றனர். அதே போல எதிரிகளை வீழ்த்தவும் வெற்றியை பெறவும் இந்த சண்டி யாகத்தை பிரபலங்கள் பலரும் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.
சூர்யா 44 கை கொடுக்கும்: சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம் படங்கள் ஏகப்பட்ட ரசிகர்களாலும் பிரபலங்களாலும் பாராட்டப்பட்ட படங்கள். எதற்கும் துணிந்தவன் படத்தைத் தொடர்ந்து கங்குவா படமும் தியேட்டரில் வெளியாகி தோல்வியை தழுவிய நிலையில், அடுத்து சூர்யா நடிப்பில் வெளியாகவுள்ள சூர்யா 44 படம் நிச்சயம் அவருக்கு கம்பேக் படமாக அமையும் என்றும் பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார். முகமூடி, பீஸ்ட் என பூஜா ஹெக்டேவுக்கு கோலிவுட்டில் இதுவரை ஹிட் கிடைக்காத நிலையில், சூர்யா 44 அதையும் மாற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











