மும்பைக்கு போனதும் சிவக்குமார் மருமகள் பார்த்த வேலை.. செம ரிசல்ட் போங்க.. என்னனு நீங்களே பாருங்க
மும்பை: நடிகை ஜோதிகா குறித்த தகவல்கள் சிறிய அளவில் ஏதாவது வந்தால் கூட அது என்ன என்கிற கேள்வி பலருக்கும் இயல்பாகவே எழுந்து விடுகிறது. ஜோதிகா தற்போது பாலிவுட்டில் கலக்கி வரும் நடிகையாக மாறியுள்ளார். பாலிவுட் படங்கள், ஹிந்தி வெப் சீரிஸ்கள் என ஜோதிகா அடுத்தடுத்து ஸ்கோர் செய்து வருகிறார். இப்படியான நிலையில் ஜோதிகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் கடந்த 3 மாதங்களில் 9 கிலோ எடையைக் குறைத்துள்ளதாக பதிவிட்டுள்ளார். இது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகை ஜோதிகா மும்பைக்கு சென்றதும் அவருக்கும் சிவக்குமாருக்கும் இடையில் பிரச்னை, அதனால் தான் ஜோதிகா மும்பைக்குச் சென்று விட்டார் என கிசுகிசுக்கள் கிளம்பியது. இது மட்டும் இல்லாமல், இவர்களுக்கு இடையிலான பிரச்னை என்பது ஜோதிகா மற்றும் சூர்யாவுக்கு இடையில் விவாகரத்து வரை சென்றுள்ளது என்றெல்லாம் புகைச்சலை கிளப்பினார்கள். இது சூர்யா மற்றும் ஜோதிகாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சி கிளப்பியது.
இப்படி இருக்கும்போது, அவர்களின் மகள் தியா தான் எடுத்த ஆவணப்படத்திற்கு விருது வென்றார். அதற்கு சூர்யாவும் ஜோதிகாவும் தனித்தனியே வாழ்த்து கூறினார்கள். இது இவர்களின் விவாகரத்து கிசுகிசுவை மேலும் புகைச்சலாக மாற்றியது. அதன் பின்னர் கங்குவா படத்தின் ரிலீஸுக்கு முன்னால், இருவரும் ஒன்றாக விமான நிலையத்திற்கு வந்து, வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள். கங்குவா படம் சரியாக போகாததால், இணையவாசிகள் கங்குவா படத்தை தாளித்து எடுத்துவிட்டார்கள். அப்போது சூர்யாவுக்கும் கங்குவா படத்திற்கு ஆதரவாக ஜோதிகா தனது சமூக வலைதளங்களில் பேசி வாங்கிக் கட்டிக் கொண்டார்.
ஜோதிகா: குறிப்பாக கங்குவா படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாக பெரிய அடி வாங்கியது. படத்தின் திரைக்கதை, இசை, பின்னணி இசை, வசனம் என அனைத்துமே ரசிகர்களால் கடுமையாக விமர்சனம் செய்யப்பட்டது. இந்த படத்தின் மீது சூர்யா மட்டும் இல்லாமல் அவரது ரசிகர்களும் பெரும் நம்பிக்கையில் இருந்தார்கள். ஆனால் படம் அடிவாங்கியது. இப்படியான நிலையில் சூர்யாவுக்கு ஆதரவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார் ஜோதிகா. குறிப்பாக இந்திய சினிமாவில் இதெல்லாம் சாதாரணம் தானே என்றெல்லாம் கேட்டார். இது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியைக் கொடுத்ததால், விமர்சகர்கள் தொடங்கி, ரசிகர்கள் வரை ஜோதிகாவை ரவுண்ட் கட்டியதால் ஜோதிகா அமைதியானார்.
மும்பை: ஜோதிகா மும்பைக்கு போனதற்கு காரணமாக மற்றொரு விஷயம் கூறப்படுகிறது. அதாவது ஜோதிகாவுக்கு அவரது அம்மாவுடன் இருக்க வேண்டும் என திட்டமிட்டதால்தான் மும்பைக்கு தனது கணவர் மற்றும் குடும்பத்துடன் குடிபெயர்ந்துள்ளார். இது மட்டும் இல்லாமல், அவர்களின் குழந்தைகளின் உயர்கல்விக்காக மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார்கள் எனவும் பேச்சுகள் இப்போது வரை உலா வருகிறது. மேலும் ஜோதிகாவுக்கு படங்களில் நடிக்க ஆர்வம் இருக்கிறது. ஆனால் சென்னையில் இருந்து கொண்டு படங்களில் நடிப்பது என்பது சவாலான விஷயமாக மாறிவிடும் என யோசித்துதான் மும்பைக்கு குடிபெயர்ந்துள்ளார் எனவும் பேச்சுகள் அடிபடுகிறது.
ஜோதிகா மும்பைக்கு குடிபெயர்ந்த பின்னர், சூர்யாவும் மும்பைக்கு குடிபெயர்ந்து விட்டார். தற்போது, மும்பையில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்து தனது 45 வது படத்தின் படப்பிடிப்பில் நடித்துக் கொண்டு உள்ளார். ஜோதிகா மும்பைக்கு ஷிப்ட் ஆனதும், பாலிவுட்டில் படங்களில் நடிக்க முயற்சி செய்து, அதில் வெற்றியும் பெற்று வருகிறார். அஜய் தேவ்கன், மாதவன் உடன் இணைந்து சைத்தான் படம் அதன் பின்னர், டப்பா கார்டெல் வெப் சீரிஸ் என அடுத்தடுத்து ஹிட் கொடுத்துக் கொண்டு உள்ளார் ஜோதிகா.

சர்ச்சை: தற்போது இரண்டு படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார் என கூறப்படுகிறது. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில், தென்னிந்திய சினிமா குறித்து காட்டமான விமர்சனத்தை முன் வைத்திருந்தார். அதாவது, தென்னிந்திய சினிமாவில் நடிகைகளுக்கு மதிப்பு இல்லை. அவர்களுக்கு வலுவான கதாபாத்திர வடிவமைப்பு இருந்ததில்லை. மேலும் கதாநாயகிகள் அந்த படங்களில் கதாநாயகனுடன் இணைந்து நடனம் ஆடவும், ரொமான்ஸ் செய்யவும் தான் கதாபாத்திரம் வடிவமைக்கப்படுகிறது. நானும் அப்படியான கதாபாத்திரங்களில் நடித்துள்ளேன். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குப் பின்னர், இது குறித்து தெரிந்து கொண்டு அப்படியான படங்களில் நான் நடிப்பதை நிறுத்திவிட்டேன்" எனக் கூறினார். இவரது இந்த பேட்டி இணையத்தில் வேகமாக பரவியது. தென்னிந்திய சினிமாவை ஜோதிகா இவ்வாறு விமர்சித்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

உடல் எடை: ஜோதிகா தற்போது பிசியாக நடித்து வருவதால் தனது கதாபாத்திரங்களுக்கு ஏதுவாக உடல் எடையை குறைத்துள்ளார். இது தொடர்பாக அவர் Amura என்ற உடல் எடையைக் குறைக்கும் நிறுவனத்துடன் இணைந்து கடந்த மூன்று மாதத்தில் 9 கிலோ எடையைக் குறைத்துள்ளதாக அவரே தெரிவித்துள்ளார். மேலும் தனது மாஸ்டர் மற்றும் Amura என்ற அமைப்பினருடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். மேலும் அவர்களுக்கு நன்றி தெரிவித்து கடிதமும் எழுதியுள்ளார். ஜோதிகா தற்போது செம ஸ்லிம்மாக இருக்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் அடுத்து வருகிறார்கள். ஜோதிகா இதற்காக அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி செக் செய்தும் வருகிறாராம்.
சூர்யா: சூர்யாவைப் பொறுத்தவரையில் தற்போது தனது 45வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி வருகிறார். இது மட்டும் இல்லாமல் இவரது நடிப்பில் ரெட்ரோ படம் ரிலீஸ்க்கு தயாராக உள்ளது. இதில் சூர்யா, பூஜா ஹெக்டே, நாசர், கருணாகரன், ஜோஜு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ளார். படம் வரும் மே மாதம் முதல் தேதியில் உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகவுள்ளது. படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். படக்குழு நேற்று அதாவது மார்ச் 22ஆம் தேதி படத்தில் இருந்து இரண்டாவது பாடலை வெளியிட்டார்கள். பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா படம் சரியாக போகவில்லை. படம் வணிக ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் தோல்வி படமாக மாறியது. இதனால் ஆவலோடு காத்துக் கொண்டு இருந்த சூர்யா ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றம் தான் மிஞ்சியது. இதனால் ரசிகர்களுக்கு தற்போது பெரும் நம்பிக்கையாக உள்ள படம் ரெட்ரோ. இந்த படத்தின் டீசர், இரண்டு பாடல்கள் என அனைத்தும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











