மும்பை போனது இதுக்குத்தானா? பிலிம்பேர் விழாவில் மோசமான உடையில் ஜோதிகா.. கொந்தளிக்கும் நெட்டிசன்ஸ்
சென்னை:சூர்யா மற்றும் ஜோதிகா மும்பையில் செட்டிலானதில் இருந்தே இவர்கள் இருவர் பற்றிய செய்திகள் அடிக்கடி சமூக வலைத்தளத்தில் வலம் வருகின்றன. அந்த வகையில் தற்போது ஜோதிகா பிலிம்பேர் விருதுவழங்கும் விழாவிற்கு அணிந்து சென்ற உடை தற்போது பேசுபொருளாகி உள்ளது.
சூர்யா தற்போது பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகி உள்ள கங்குவா படத்தில் நடித்துள்ளார். 16 மொழிகளில் வெளியாக உள்ள இத்திரைப்படம் சூர்யாவின் திரைப்பயணத்தில் மிகவும் முக்கியமான திரைப்பயணமாகும். இந்த படம் அக்டோபர் மாதம் தியேட்டரில் வெளியாக உள்ளது. இப்படத்தைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்கு சூர்யாவுக்கு நிற்க கூட நேரம் இல்லாத நிலையில் படங்களில் புக் ஆகி இருக்கிறார்.

சூர்யா,ஜோதிகா: சமீபத்தில் சூர்யா மற்றும் ஜோதிகா குடும்பத்துடன் மும்பையில் குடியேறியது பெரிய சர்ச்சையானது. அதாவது சூர்யாவை குடும்பத்துடன் பிரித்து தனது சொந்த ஊரான மும்பைக்கு ஜோதிகா அழைத்து சென்று விட்டார் என செய்திகள் வெளியானது. ஆனால் அவர்களின் குழந்தைகளின் படிப்புக்காக மற்றும் தொழில் நிமித்தமாக தான் சூர்யா மும்பையில் வீடு வாங்கியதாக கூறப்படுகிறது.
பாலிவுட்டில் சூர்யா: இந்த சூழலில் நீண்ட காலத்திற்கு பிறகு ஜோதிகா மீண்டும் பாலிவுட்டில் என்ட்ரியாகி மாதவனுடன் சேர்ந்து ஷைத்தான் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து ஸ்ரீகாந்த் என்ற படத்தில் நடித்தார். அந்த படம் கடந்த மாதம் தியேட்டரில் வெளியானது. அதுமட்டுமில்லாமல் அடுத்தடுத்து பாலிவுட் படத்தில் கமிட்டாகி வருகிறார். ஜோதிகா மட்டுமில்லாமல், பாலிவுட்டில் அறிமுகப்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்காக சூர்யாவும் பாலிவுட் இயக்குனர் உடன் பேச்சுவார்த்தையில் இறங்கி இருக்கிறார். கிட்டத்தட்ட அந்த படம் உறுதியாகிவிட்டது சொல்லப்படுகின்றன.
மொத்தமாக மாறிய ஜோதிகா: இந்த படம் மட்டும் கமிட்டாகி விட்டால், சூர்யா பான் இந்தியா ஸ்டாராக மாறிவிடுவார். அதோடு மட்டுமல்லாமல் பாலிவுட் கதாநாயகனாக மாறிவிடவும் வாய்ப்பு இருக்கிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக சூர்யாவை ஜோதிகா தன் பக்கம் இழுத்துவிட்டதாக கூறப்படுகிறது. சூர்யாவாக அவ்வப்போது சென்னை வந்து செல்கிறார். ஆனால்,ஜோதிகா தேர்தலுக்கு ஓட்டுப்போடக்கூட வராமல் டூர் சென்றிருந்தார்.
என்ன ஜோதிகா இது: இந்நிலையில்,நடிகை ஜோதிகா ஹைதராபாத்தில் நடித்த பிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் கலந்து கொண்டார். அந்த விழாவிற்கு அவர் அணிந்து வந்த உடை தான் தற்போது பேசுபொருளாகி உள்ளது. அதாவது கருப்பு பிளேசர் போட்டுக்கொண்டு, அப்பட்டமாக முன்னழகு தெரியும் படி மீடியாக்களுக்கு போஸ் கொடுத்து இருந்தார். இந்த போட்டோவைப் பார்த்த பேன்ஸ், இத்தனை ஆண்டுகள் தமிழ்ப் பெண்ணாக சேலையில் வலம் வந்த ஜோதிகா இப்படி மாறிவிட்டாரா என்றும், இதற்குத்தான் மும்பைக்கு போனீங்களா என்றும் கொந்தளித்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்ஸ், அந்த உடையில் ஜோதிகா அழகாக இருக்கிறார். அதில் ஆபாசம் தெரியவில்லை என கருத்துக்களை மாறி மாறி பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











