அட்லீ இயக்கத்தில் சூர்யா நடிக்கப்போறாரா?.. ஷங்கர் டவுன் ஆனதும் சிஷ்யன் பிக்கப் பண்ணிட்டாரா?
சென்னை: தளபதி விஜய் தமிழ் சினிமாவுக்கு டாட்டா காட்டவுள்ள நிலையில், அட்லீக்கு ஹீரோ பஞ்சம் வந்துவிட்டதாக கூறுகின்றனர். புஷ்பா 2 படத்தை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் அட்லீ இயக்கத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், புஷ்பா 2 திரைப்படமே சர்ச்சையில் சிக்கியுள்ளது.
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் அட்லீ இயக்கவுள்ள படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் அந்த படம் ஆரம்பிக்க படாமல் இருப்பதாக கூறுகின்றனர். அஜித்தை வைத்து அட்லீ இயக்கப் போகிறார் என்றும் யஷ் நடிக்கப் போகிறார் என்றும் ஏகப்பட்ட பேச்சுகள் உலா வரும் நிலையில், நடிகர் சூர்யா அந்த படத்தில் நடிக்கப்போவதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன.

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடிகர் சூர்யா நடித்த வருகிறார். அந்தப் படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் நடிப்பாரா அல்லது ஷங்கர் இயக்கத்தில் வேள்பாரி படத்தில் நடிப்பாரா? என கேள்விகள் எழுந்து வந்த நிலையில், மேலும் ஒரு ட்விஸ்ட்டான அறிவிப்பை சூர்யா வெளியிட உள்ளார் என்கின்றனர்.
வேள்பாரி டவுட்டு தான்?: ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான இந்தியன் 2 திரைப்படம் மிகப்பெரிய சரிவை சந்தித்த நிலையில், இந்தியன் 3 திரைப்படம் திட்டமிட்டபடி வெளியாகுமா? வெளியானாலும் வெற்றி அடையுமா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன. ஏன் சேஞ்சர் மற்றும் இந்தியன் 3 படங்கள் வெளியாகி வெற்றி பெற்றால் தான் வேள்பாரி படத்தை ஷங்கர் ஆரம்பிக்க முடியும் என்கின்றனர். இப்போது உள்ள நிலைமையில் புதிதாக ஷங்கரை நம்பி 500 கோடி பட்ஜெட்டை ஒதுக்க யாரும் முன் வர மாட்டார்கள் என்கின்றனர்.
அட்லீக்கு ஹீரோ கிடைக்கலையா?: ஜவான் படத்தை ரிலீஸ் செய்து விட்டு கிட்டத்தட்ட ஒரு வருடமாக தனது அடுத்த படத்திற்கு ஹீரோ கிடைக்காமல் அட்லீ தவமாய் தவம் கிடந்து வருகிறார். விஜய் தொடர்ந்து நடிப்பேன் என்று சொல்லியிருந்தால், ஷாருக்கானையும் விஜய்யையும் வைத்து ஒரு சூப்பரான பான் இந்தியா படத்தை அட்லீ இந்நேரம் ஆரம்பித்திருப்பார் என்கின்றனர். ஆனால், அது நடக்கவில்லை. அல்லு அர்ஜுனும் அட்லீ படத்தில் நடிக்கப் போவதில்லை என தகவல்கள் வெளியான நிலையில், அட்லீ யாரை இயக்கப் போகிறார் என்கிற கேள்வி எழுந்துள்ளது.
அட்லீ இயக்கத்தில் சூர்யா?: கங்குவா படத்தைத் தொடர்ந்து நடிகர் சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா 44 படத்தில் நடித்து வருகிறார். அந்த படம் விரைவில் நிறைவடைய உள்ள நிலையில், அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும், அந்த படத்திற்கு அனிருத் இசைஅமைக்கப் போவதாகவும் கூறுகின்றனர். அட்லீ படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் தான் உண்மை தெளிவாகும்.


Click it and Unblock the Notifications











