வணங்கான் படத்தில் சூர்யாவின் கேரக்டர் இது தான்… கூடவே ஷூட்டிங் அப்டேட்டும் கொடுத்த பிரபலம்

சென்னை: 19 ஆண்டுகளுக்குப் பிறகு சூர்யா, பாலா கூட்டணியில் உருவாகி வரும் படம் 'வணங்கான்.'

இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக தெலுங்கு நடிகை கிருத்தி ஷெட்டி நடித்து வருகிறார்.

'வணங்கான்' படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரியில் நடைபெற்று வந்த நிலையில், தற்போது கிடைப்பில் உள்ளது.

சூர்யா – பாலா கூட்டணி

சூர்யா – பாலா கூட்டணி

ஆரம்ப காலங்களில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தார் சூர்யா. அப்போது 'நந்தா' படத்தில் சூர்யாவை ஹீரோவாக்கி, அவருக்கு மிகப் பெரிய கம்பேக் கொடுத்தார் டைரக்டர் பாலா. அன்று முதல் பாலா - சூர்யா இருவரின் நட்பு தொடர்ந்து வருகிறது. நந்தா படத்தை தொடர்ந்து பிதாமகன் படத்திலும் இணைந்த இந்தக் கூட்டணி, அதன்பிறகு இணையவில்லை. பிதாமகன் படத்தில் சூர்யாவுடன் விக்ரமும் லீட் ரோலில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

19 ஆண்டுகளுக்குப் பின் வணங்கான்

19 ஆண்டுகளுக்குப் பின் வணங்கான்

நந்தா, பிதாமகன் படங்களைத் தொடர்ந்து சூர்யா, பாலா கூட்டணி இணையும் என எதிர்பார்த்திருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாலா இயக்கிய 'அவன் இவன்' படத்தில், சிறிய கேமியோ ரோலில் மட்டும் வந்துபோனார் சூர்யா. இந்நிலையில், 19 வருட இடைவேளைக்குப் பிறகு இருவரும் 'வணங்கான்' படத்தில் இணைந்துள்ளனர். இதன் முதற்கட்ட படப்பிடிப்பு, கன்னியாகுமரியில் நடைபெற்றது. சூர்யா ஜோடியாக கிருத்தி ஷெட்டி நடிக்க, ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார்.

முடங்கிய வணங்கான் சூட்டிங்

முடங்கிய வணங்கான் சூட்டிங்

முதற்கட்ட படப்பிடிப்பு பிரச்சினை இல்லாமல் நடந்து முடிந்த நிலையில், சூட்டிங் ஸ்பாட்டில் சூர்யாவுக்கும் பாலாவுக்கும் இடையே பிரச்சினை என்று தகவல் வெளியானது. இதனால் வணங்கான் படம் டிராப் ஆகிவிட்டதாக செய்திகள் வர, அது வதந்தி என கூறும் விதமாக சூர்யாவும் ட்வீட் செய்திருந்தார். இந்நிலையில், வணங்கான் படத்தின் கதையில் பாலா சில மாற்றங்கள் செய்துவருவதாகவும் சொல்லப்பட்டது. இதனிடையே சூர்யாவும் சிவா இயக்கும் 'சூர்யா 42' படத்தில் நடிக்கச் சென்றுவிட்டார்.

ஷீகான் ஹூசைனி விளக்கம்

ஷீகான் ஹூசைனி விளக்கம்

இந்நிலையில், வணங்கான் படத்தில் நடித்து வரும் பிரபல கராத்தே மாஸ்டர் ஷீகான் ஹூசைனி, ஷூட்டிங் குறித்து அப்டேட் கொடுத்துள்ளார். தனியார் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், "வணங்கான் படத்தில் நடிப்பதில் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதில் புதிய தோற்றத்தில் நடிக்க உள்ளதால் அதற்காக தயாராகி வருகிறேன். மேலும் எப்போது வேண்டுமானாலும் வணங்கான் படப்பிடிப்பு மீண்டும் தொடங்கலாம். இந்தப் படத்தில் சூர்யா மீனவராக நடிக்கிறார்" என்றும் ஷீகான் ஹூசைனி கூறியுள்ளார். இதனால் சூர்யா - பாலா ரசிகர்கள் நிம்மதியடைந்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X