ஜிம்மில் வெறித்தனம் காட்டிய சூர்யா... நெட்டிசன்களின் ரியாக்‌ஷனில் திணறும் டிவிட்டர்!!

சென்னை: ஜெய்பீம், எதற்கும் துணிந்தவனை தொடர்ந்து சூர்யா தனது 42வது படத்தில் நடித்து வருகிறார்.

சிறுத்தை சிவா இயக்கும் இந்தப் படத்தை ஸ்டூடியோ க்ரீன் தயாரிக்க 3டி டெக்னாலஜியில் பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தில் சூர்யா ஜோடியாக திஷா பதானி நடித்து வருகிறார்.

சூர்யா 42 சூட்டிங் வேகமாக நடைபெற்று வரும் நிலையில், ஜிம்மில் சூர்யா வெறித்தனமாக ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.

 சிவா இயக்கத்தில் சூர்யா 42

சிவா இயக்கத்தில் சூர்யா 42

சூர்யா நடிப்பில் 2021ம் ஆண்டு ஜெய்பீம் திரைப்படமும், கடந்தாண்டில் எதற்கும் துணிந்தவனும் வெளியானது. நேரடியாக அமேசான் ப்ரைமில் வெளியான ஜெய்பீம், விமர்சன ரீதியாக பெரும் பாராட்டைப் பெற்றது. ஆனால் எதற்கும் துணிந்தவன் படத்துக்கு கலவையான விமர்சனங்களை மட்டுமே பெற்றது. மேலும், விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் நடித்து மிரட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து தற்போது சிவா இயக்கத்தில் சூர்யா 42 படத்தில் நடித்து வருகிறார்.

 டிராப் ஆன வணங்கான்

டிராப் ஆன வணங்கான்

முன்னதாக பாலா இயக்கத்தில் வணங்கான் படத்தில் நடித்து வந்தார் சூர்யா. இந்தப் படத்தின் ஷூட்டிங் கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்று வந்த நிலையில், பாதியிலேயே கைவிடப்பட்டது. இதனிடையே கடந்தாண்டு செப்டம்பரில் தொடங்கப்பட்ட சூர்யா 42 படப்பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சிறுத்தை சிவா இயக்கும் சூர்யா 42 படத்தை, ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். சூர்யா ஜோடியாக திஷா பதானியும் காமெடி கேரக்டரில் யோகி பாபுவும் நடித்து வருகின்றனர். மற்ற நடிகர்கள் பற்றிய அப்டேட் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படத்திற்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்து வருகிறார்.

 ஜிம்மில் வெறித்தனம் செய்த சூர்யா

ஜிம்மில் வெறித்தனம் செய்த சூர்யா

சூர்யா 42 பற்றிய அறிவிப்பு வெளியாகும் போதே மிரட்டலான மோஷன் போஸ்டரையும் படக்குழு வெளியிட்டிருந்தது. இந்நிலையில், இந்தப் படத்திற்காக சூர்யா ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. சூர்யா 42 படத்திற்காக டெடிக்கேட்டடாக ஜிம்மில் ஒர்க் அவுட் செய்துவருவதாக கேப்ஷன் கொடுத்துள்ளது. இந்த வீடியோ வெளியானது முதல் ட்வீட்டரில் ட்ரெண்டாகி வருகிறது. சூர்யா 42, வாடிவாசல் போன்ற ஹேஷ்டேக்கில் சூர்யா ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகின்றனர்.

 நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

நெட்டிசன்கள் ரியாக்‌ஷன்

சூர்யா ஜிம் ஒர்க் அவுட் வீடியோ அவரது ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றாலும் நெட்டிசன்கள் இதனை ட்ரோல் செய்து வருகின்றனர். ஜிம்மில் ஒர்க் அவுட் செய்தால் மட்டும் போதாது, படம் சூப்பராக இருக்க வேண்டும் என கமெண்ட்ஸ் செய்துள்ளனர். இன்னொரு நெட்டிசன் இப்படியெல்லாம் ஒர்க் அவுட் செய்வதால் ரசிகர்கள் தியேட்டருக்கு வருவார்கள் என நினைக்க வேண்டாம் எனக் கூறியுள்ளார். அதேபோல் இந்த வீடியோ பாக்கும்போது படம் எந்தமாதிரி வரப்போகுதுணு தெரிஞ்சிடுச்சி எனவும் நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.

 விரைவில் ரிலீஸ் அப்டேட்

விரைவில் ரிலீஸ் அப்டேட்

பாகுபலி, கேஜிஎஃப் படங்களின் பிரம்மாண்டமும் மேக்கிங்கும் சூர்யா 42 படத்தில் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே சூர்யா 42 படத்திற்கு வீர் என டைட்டில் முடிவாகியுள்ளதாக சொல்லப்படுகிறது. சூர்யா 42 படத்தின் டைட்டில் 'வீர்' என்ற செய்தி வைரலான நிலையில், படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. மிகப் பிரம்மாண்டமாக உருவாகி வரும் சூர்யா 42, 3டி தொழில்நுட்பத்தில் 10 மொழிகளில் உருவாகி வருவதும் குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X