சூர்யா ரசிகர்களே ட்ரெண்டாக்க ரெடியா..? #Suriya36 டைட்டில் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

By Vignesh Selvaraj

சென்னை: சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் எஸ்.ஆர்.பிரகாஷ் பாபு, எஸ்.ஆர்.பிரபு இணைந்து இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்கிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை வரும் மார்ச் 5-ம் தேதி வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சூர்யா 36

சூர்யா 36

சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடிப்பது அனைவருக்கும் தெரியும். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இசை

இசை

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தற்கு சிவக்குமார் விஜயன் ஒளிப்பதிவு செய்கிறார். ஜி.கே.பிரசன்னா படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். இந்தப் படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.

அம்பாசமுத்திரம் செட்

அம்பாசமுத்திரம் செட்

தற்போது, இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடந்து வருகிறது. இதற்காக சென்னையிலையே அம்பாசமுத்திரம் போல் பிரம்மாண்ட செட் போடப்பட்டுள்ளது. இந்த ஷெட்யூலில் நடிகை சாய் பல்லவியும் கலந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூர்யா 36

சூர்யா 36

'சூர்யா 36' படத்தில் மொத்தம் 5 பாடல்கள் இடம்பெறுமாம். படத்தை இந்த ஆண்டு தீபாவளிக்கு ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இதே தீபாவளிக்கு அஜித், விஜய் படங்களும் வெளியாகக் காத்திருக்கின்றன.

ஃபர்ஸ்ட் லுக்

இந்நிலையில், 'சூர்யா 36' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் மார்ச் 5-ம் தேதி டைட்டில் இடம்பெறும் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் ஆக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் செல்வராகவன். டைட்டில் வெளியானதும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X