அது என்னப்பா NGK..? சூர்யா படத்தின் டைட்டில் அறிவிப்பு!
Recommended Video

சென்னை : சூர்யாவின் 36-வது படத்தை செல்வராகவன் இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு ஹீரோயின்கள் நடிக்கிறார்கள்.
பல வெற்றிப் படங்களைத் தயாரித்திருக்கும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை சற்று முன்பு வெளியிடப்பட்டுள்ளது. படத்திற்கு #NGK என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

சூர்யா 36
சூர்யா செல்வராகவன் இயக்கத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரகுல் பிரீத் சிங், சாய் பல்லவி என இரண்டு கதாநாயகிகள் நடிப்பது அனைவருக்கும் தெரியும். தெலுங்கு நடிகர் ஜெகபதி பாபு இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இசை
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வரும் இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது. தற்போது சென்னையில் அம்பாசமுத்திரம் போல செட் போடப்பட்டு இரண்டாம் கட்ட ஷூட்டிங் நடைபெற்று வருகிறது.
ஃபர்ஸ்ட் லுக்
இந்நிலையில், 'சூர்யா 36' படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. படத்தின் டைட்டில் NGK என்று வைத்துள்ளனர். போஸ்டரில் சூர்யா சேகுவாரா கெட்டப்பில் இருக்க, அதை சுற்றி கைகள் ஓங்கும்படி வரைபடங்கள் உள்ளது.

அரசியல் படம்
போஸ்டரை வைத்துப் பார்க்கும்போது கம்னியூசம் பேசும் படமாகத் தான் இருக்கும் என்று தெரிகிறது. ரஞ்சித்தின் 'மெட்ராஸ்' படம் போல ஒடுக்கப்பட்ட மக்களின் குரலாக இந்த NGK இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.தற்போது அனைவரின் கேள்வியும் NGK என்றால் என்ன? என்பது தான்.

NGK குழப்பம்
ஃபர்ஸ்ட் லுக் வந்ததுமே ரசிகர்களுக்கு ஒரு குழப்பமும் வந்துவிட்டது. சிலர் இது சூர்யாவின் கதாபாத்திர பெயரின் சுருக்கம் என்றும் கூறி வருகின்றனர். ஆனால், படக்குழு டைட்டிலுக்கு என்ன விளக்கம் தரப்போகிறது எனத் தெரியவில்லை.


Click it and Unblock the Notifications











