சூர்யாவுக்கு ஜோடி யாருனு பார்த்தீங்களா..? - #Suriya36 லேட்டஸ்ட் அப்டேட்!
சென்னை : சூர்யா நடிக்கவிருக்கும் 36-வது படத்தை செல்வராகவன் இயக்குகிறார். இந்தப் படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்தப் படத்தின் முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த அறிவிப்பு சற்றுமுன்பு வெளியாகி இருக்கிறது.
'சூர்யா 36' படத்தின் ஹீரோயினாக 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தானா சேர்ந்த கூட்டம்
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்திருக்கும் இப்படத்தின் டப்பிங் நிறைவடைந்துள்ளது. இந்தப் படம் பொங்கல் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

சூர்யா 36
ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் சூர்யாவின் அடுத்த படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இயக்குநர் செல்வராகவன்தான் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார். இது இருவரும் இணையும் முதல் படமாகும்.

ஷூட்டிங் விரைவில்
வரும் பொங்கலுக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், தீபாவளிக்கு அடுத்த படம் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகமாக இருக்கிறார்கள். சூர்யா 36 படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்குகிறது.
ஹீரோயின் சாய் பல்லவி
சூர்யா 36 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. படத்தின் ஹீரோயினாக 'ப்ரேமம்' புகழ் சாய் பல்லவி நடிக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷ் ஜோடியும் இவர்தான்
'மலர் டீச்சர்' சாய் பல்லவிதான் 'மாரி 2' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த தகவலை சில மாதங்களுக்கு முன்பு இயக்குநர் பாலாஜி மோகன் ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











