»   »  "போடு தகிட திகிட..!" - இன்று மாலை சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு! #Suriya36

"போடு தகிட திகிட..!" - இன்று மாலை சூர்யா படத்தின் முக்கிய அறிவிப்பு! #Suriya36

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை : 'தானா சேர்ந்த கூட்டம்' படத்திற்குப் பிறகு சூர்யா நடிக்கவிருக்கும் படத்தை செல்வராகவன் இயக்கவிருப்பது அதிகாரப்பூர்வமாக ஏற்கெனவே அறிவிக்கப்பட்டது.

'சிங்கம் 3' படத்துக்குப் பிறகு, தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்திருக்கிறார் நடிகர் சூர்யா. இப்படத்தின் டப்பிங் நிறைவடைந்துள்ளது.

முதல் முறையாக கீர்த்தி சுரேஷூடன் ஜோடி சேர்ந்திருக்கும் சூர்யாவை திரையில் பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். இந்தப் படம் பொங்கல் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

அடுத்த படம்

அடுத்த படம்

சூர்யாவின் அடுத்த படத்தின் அறிவிப்பு சில வாரங்களுக்கு முன்பு அதிகாரப்பூர்வமாக வெளியானது. ஜனவரியில் ஷூட்டிங் தொடங்கும் இந்தப் படத்தை ட்ரீம் வாரியர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்தத் தகவலை ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார்.

செல்வராகவன் இயக்கம்

செல்வராகவன் இயக்கம்

இயக்குநர் செல்வராகவன்தான் சூர்யாவின் அடுத்த படத்தை இயக்கப்போகிறார். இதற்கான அறிவிப்பை செல்வராகவன் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்தார். இது இருவரும் இணையும் முதல் படமாகும்.

பொங்கலும் தீபாவளியும்

பொங்கலும் தீபாவளியும்

வரும் பொங்கலுக்கு 'தானா சேர்ந்த கூட்டம்' படம் ரிலீசாக இருக்கும் நிலையில், தீபாவளிக்கு அடுத்த படம் ரிலீஸாகும் எனத் தெரிவிக்கப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகமானார்கள்.

சூர்யா 36

இந்நிலையில், சூர்யா 36 படம் பற்றிய முக்கிய அறிவிப்பு இன்று மாலை 5 மணிக்கு வெளியாகும் என ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. படக்குழு பற்றிய விவரம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TSK கேட்டா இது வருதே

தானா சேர்ந்த கூட்டம் அப்டேட் கேட்டா, Suriya36 அப்டேட் வந்துட்டு இருக்கே..!

ப்ரொடியூசருக்கும் மேல

கேக்காமலே அப்டேட் குடுக்குறீங்களே... நீங்க ப்ரொடியூசருக்கும் மேல..!

என்னைக்காவது சொன்ன டைமுக்கு

5 மணியாம்... கேக்குதா..? @ஸ்டூடியோ கிரீன்... நீ என்னைக்காவது டைம் சொல்லிருக்கியா... இல்ல சொன்ன டைம்க்கு தான் ரிலீஸ் பண்ணிருக்கியா..?

படக்குழு விவரம்

"படக்குழு, நடிகர் நடிகைகள் பற்றிய அறிவிப்பா தான் இருக்கும்னு நினைக்கிறேன்." என ஒரு ரசிகர் சூர்யா துள்ளிக்குதித்து உற்சாகமாகும் படத்தை கமென்ட் செய்திருக்கிறார்.

English summary
Actor Suriya's next film 'Suriya36' will be produced by Dream warrior pictures. Selvaraghavan is directing the film after Surya's 'TSK'. This film's important news will be updated at today evening.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

X