சூர்யா41 படத்தின் டைட்டில்... எந்த தேதியில் ரிலீசாகுதுன்னு பாருங்க!
குமரி : நடிகர் சூர்யாவின் நடிப்பில் பாலா இயக்கிவரும் படம் சூர்யா41. இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் வைக்கப்படாத நிலையில் குமரியையொட்டிய பகுதிகளில் படத்தின் சூட்டிங் கடந்த சில தினங்களுக்கு முன்பு துவங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நடிகர் சூர்யா
நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த வெற்றிகள் அவர் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்து வருகிறது. சூரரைப் போற்று படத்தில் பயோ பிக்கில் நடித்திருந்தாலும் அதை ஒரிஜினல் ஸ்டோரி போலவே கொண்டு சென்றிருந்தார் படத்தின் இயக்குநர் சுதா கொங்கரா. இந்தப் படத்தை தன்னுடைய நடிப்பால் மெருகேற்றிருந்தார் சூர்யா.

ஜெய் பீம் படம்
தொடர்ந்து அடுத்ததாக ஜெய்பீம் படத்திலும், பழங்குடியினருக்கு எதிரான பிரச்சினைகளில் வழக்கறிஞராக அவரது செயல்பாடு படத்தில் சிறப்பாக காணப்பட்டது. இந்தப் படம் சர்வதேச அளவில் பல விருதுகளை பெற்றுத் தந்தது. சூரரைப் போற்று மற்றும் ஜெய்பீம் இரண்டுமே ஓடிடியில் நேரடியாக ரிலீசானது.

பாராட்டை தந்த எதற்கும் துணிந்தவன்
இந்நிலையில் கடந்த மாதத்தில் வெளியான எதற்கும் துணிந்தவன் படம் திரையரங்குகளில் ரிலீசாகி நல்ல வசூலையும் விமர்சனங்களையும் சூர்யாவிற்கு பெற்றுத் தந்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்திருந்த இந்தப் படம் பாலியல் வன்கொடுமைக்கு எதிரான விஷயங்களை பதிவு செய்தது. பாண்டிராஜ் படத்தை இயக்கியிருந்தார்.

சூர்யாவின் 41வது படம்
இந்நிலையில் தற்போது சூர்யா தனது 41வது படத்தின் சூட்டிங்கில் பங்கேற்றுள்ளார். படத்தை இயக்குநர் பாலா இயக்கி வருகிறார். 18 ஆண்டுகளுக்கு பிறகு இந்தக் கூட்டணி மீண்டும் தற்போது இணைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு படத்தின் சூட்டிங் கன்னியாகுமரியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

தமிழ் புத்தாண்டில் தலைப்பு?
இந்தப் படத்திற்கு தலைப்பு வைக்கப்படாத நிலையில் வரும் தமிழ் புத்தாண்டில் படத்தின் டைட்டில் அல்லது பர்ஸ்ட் லுக் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் தலைப்பு ஒரே வார்த்தையில் இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமே தயாரித்து வருகிறது.

சூர்யாவிற்கு ஜோடியான க்ரீத்தி ஷெட்டி
படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாகியுள்ளார் தெலுங்கு படவுலகின் முன்னணி நாயகி க்ரீத்தி ஷெட்டி. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகிறார். நந்தா, பிதாமகன் படங்களை தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் சூர்யா இணைந்துள்ள நிலையில், இந்தப் படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் என்று நம்பலாம்.


Click it and Unblock the Notifications











