24 movie: சூர்யாவை பார்த்து பயந்த சமந்தா.. 24 படத்தின் 8 ஆண்டு கொண்டாட்டம்!

சென்னை: நடிகர் சூர்யா மூன்று வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து கடந்த 2016ம் ஆண்டில் வெளியான படம் 24. விக்ரம் குமார் இயக்கம் மற்றும் எழுத்தில் உருவாகி இருந்த இந்த படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக சமந்தா மற்றும் நித்யா மேனன் நடித்திருந்தனர். படத்தில் ஹீரோவாகவும் வில்லனாகவும் இரு வேறு கேரக்டர்களில் மிரட்டி இருந்தார் சூர்யா. இந்த படத்தில் சூர்யா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரியும் மிகச் சிறப்பாக பார்க்கப்பட்டது.

இந்தப்படம் 8 கடந்த நிலையிலும் இந்த படம் சூர்யா கரியரில் பெஸ்ட் ஆக பார்க்கப்படுகிறது பார்க்க ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதையும் பார்க்க முடிகிறது படம் இரண்டு தேசிய விருதுகளையும் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் படத்தின் 8 ஆண்டு கொண்டாட்டத்தை இன்றைய தினம் படக்குழுவினர் சமூக வலைதளம் மூலம் கொண்டாடி வருகின்றனர். இதனிடையே படத்தில் சூர்யாவின் நடிப்பு குறித்த சமந்தாவின் பழைய வீடியோ ஒன்றும் தற்போது ட்ரெண்டாகி வருகிறது.

Suriya s 24 movie celebrates completion of 8 years and samantha video trends

24 படம்: நடிகர் சூர்யா, சமந்தா, நித்யா மேனன் உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2016ம் ஆண்டு மே மாதம் 6ம் தேதி வெளியான படம் 24. இந்தப் படத்தை எழுதி இயக்கியிருந்தார் டைரக்டர் விக்ரம் குமார். சூர்யாவின் 2D என்டர்டைன்மெண்ட் சார்பில் தயாரிக்கப்பட்ட இந்த படத்திற்கு ஏஆர் ரஹ்மான் இசையமைத்தார். படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து ஹிட்டடித்தன. படத்தில் சூர்யா மூன்று விதமான கேரக்டர்களில் நடித்திருந்தார். 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட இந்த படம் 100 கோடிகளை கடந்து வசூலித்தது. இந்த படத்தில் சூர்யா மற்றும் சமந்தாவின் கெமிஸ்ட்ரி சிறப்பாக அமைந்திருந்தது.

சூர்யா கேரியர் பெஸ்ட் படம்: இதே போல சிறிது நேரமே படத்தில் வந்தாலும் சூர்யா மற்றும் வித்யா மேனன் ஜோடியும் சிறப்பாக பார்க்கப்பட்டது. சயின்ஸ் பிக்ஷன் ஜானரில் உருவாகியிருந்த இந்த படம் டைம் டிராவலிங்கை மையமாக வைத்து வெளியானது. படத்தில் ஆத்ரேயா என்ற கேரக்டரில் சூர்யா வில்லத்தனத்தில் மிரட்டியிருந்தார். தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கிலும் இதே டைட்டிலில் இந்த படம் ரிலீசாகி மிகச் சிறப்பான விமர்சனத்தையும் வசூலையும் பெற்றது. மேலும் தேசிய விருதுகளையும் பிலிம்பேர் விருதுகளையும் இந்தப் படம் குவித்தது. சூர்யாவின் கேரியரில் பெஸ்ட் படமாக 24 அமைந்தது.

8 ஆண்டுகளை கடந்த 24 படம்: இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி தற்போது 8 ஆண்டுகளை கடந்துள்ளதை படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளது. இந்த படத்தில் பங்களிப்பை கொடுத்ததற்கு பெருமைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. இந்த படம் குறித்த நடிகை சமந்தாவின் முந்தைய பேட்டி ஒன்றும் தற்போது சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. இந்த படத்தில் சமந்தா சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த சூழலில் தன்னுடன் இணைந்து ரொமான்டிக் சாங் ஒன்றில் சூர்யா நடித்ததை சமந்தா அந்த பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

சூர்யாவை பார்த்து மிரண்ட சமந்தா: காலையில் ரொமாண்டிக் பாடலில் தன்னுடன் இணைந்து டூயட் பாடிய சூர்யா, பின்பு பிற்பகலில் ஆத்ரேயாவாக வந்து மிரட்டியதாகவும் அதை பார்த்து தான் உண்மையில் மிகவும் பயந்துவிட்டதாகவும் சமந்தா தன்னுடைய பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். இந்தப் படம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்து வெற்றி படமான சூழலில், எட்டு ஆண்டுகளை கடந்த நிலையிலும் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் படத்தை ஓடிடி உள்ளிட்ட தளங்களில் பார்ப்பதற்கு அதிகமான ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருவதை பார்க்க முடிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X