Anjaan Re Release: அஞ்சான் ரீ ரிலீஸ்.. சம்பவம் செய்த சூர்யா.. முதல் நாள் வசூல் விவரம்!
சென்னை: சூர்யா நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு வெளியான 'அஞ்சான்' திரைப்படம், பத்தாண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆகஸ்ட் 15 அன்று ரீரிலீஸ் செய்யப்பட்ட இந்தத் திரைப்படம், முதல் நாளில் நல்ல வசூலைக் குவித்துள்ளது.
பத்து ஆண்டுகளுக்கு முன்பு வெளியானபோது, 'அஞ்சான்' விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது. இருப்பினும், சூர்யாவின் அதிரடி நடிப்பு, சந்தோஷ் சிவனின் ஒளிப்பதிவு மற்றும் யுவன் ஷங்கர் ராஜாவின் இசையமைப்பில் உருவான பாடல்கள் இந்தப் படத்தின் பலமாக அமைந்தன. சூர்யா இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருந்தார். சூர்யாவுடன், சமந்தா, வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி மற்றும் பிரம்மானந்தம் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்தனர்.

அஞ்சான்: 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ந் தேதி வெளியான இந்தத் திரைப்படம், ரூ. 60 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது. படம் வெளியானபோது, பாக்ஸ் ஆபிஸில் ரூ. 62 கோடி மட்டுமே வசூலித்து கடும் விமர்சனத்தை பெற்றது. ஆனாலும், ஓடிடி தளங்களில் ரசிகர்களிடையே ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது, அஞ்சான் ரீரிலீஸ் மூலம் புதிய ரசிகர்களை ஈர்த்து ஈர்த்துள்ளது. இந்தப் படம் திரைக்கு வந்த முதல் நாளில் ரூ. 72 லட்சம் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
மனசு சந்தோஷமாக இருக்கு: நேற்று படத்தை பார்த்த இயக்குநர் லிங்குசாமி, "அஞ்சான் படத்தை கடந்த 2014-ம் ஆண்டு ரிலீஸ் செய்தோம். தற்போது மீண்டும் ரீ எடிட் செய்து ரீ- ரிலீஸ் செய்து இருக்கிறோம். படத்தில் 36 நிமிடங்கள் குறைத்துள்ளேன். நீளம் குறைத்தால் மட்டும் படம் நன்றாக வந்துவிடாது. முதல் வெர்ஷனுக்கும் இதுக்கும் வித்தியாசம் இருக்கும். இந்தப் படத்தை ரீ - எடிட் செய்வதற்கு காரணம் என்னவென்றால் 11 வருடத்துக்கு முன்பே அதிகம் ட்ரோல் செய்யப்பட்ட படம் தான் அஞ்சான். இந்தப் படத்தை உண்மையாக ரசித்த சிலர் இருக்கிறார்கள். அவர்கள் 'இந்தப் படம் எனக்கு பிடிக்கும் ஏன் திட்னாங்க' என கேட்கிறார்கள். சூர்யா ரசிகர்களுக்காகவும், எங்கள் திருப்திக்காகவும் மறுவெளியீடு செய்கிறோம்.
அனைருக்கும் நன்றி: 11 வருடத்துக்கு முன்னாடி பயன்படுத்திய தகாத வார்த்தைகளையா இப்போது பயன்படுத்தி இருக்கிறேன். எனக்கு எந்த பயமும் இல்லை. வெற்றி தோல்விக்காக இந்தப் படத்தை மறு வெளியீடு செய்யவில்லை. விரும்பி தான் இந்தப் படத்தை இயக்கினேன். இந்த படத்திற்கு பெரிய அளவில் தனஞ்செயன் ஆதரவு கொடுத்துள்ளார். அவருக்கு ரொம்ப நன்றி. படத்தின் ரிசல்ட் மனதிற்கு சந்தோஷத்தை கொடுத்துள்ளது. இதுவரை 110 தியேட்டரில் படத்தை திரையிட்டு இருக்கிறோம். ஞாயிற்றுக்கிழமை வரை அஞ்சான் ஹவுஸ் புல்லாகிவிட்டது என்றார்.


Click it and Unblock the Notifications











