வேட்டையனிடமிருந்து பின்வாங்கிய கங்குவா.. இம்மாத இறுதியில் கங்குவா இசை வெளியீட்டு விழா?
சென்னை: சூர்யா நடிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் கங்குவா. ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இந்தப் படத்துக்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்திருக்கிறார். முதலில் அக்டோபர் 10ஆம் தேதி படம் ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அன்றைய தினம் ரஜினியின் வேட்டையன் ரிலீஸாவதால் அதற்கு மரியாதை கொடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக சூர்யா தெரிவித்திருந்தார். படமானது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகவிருக்கிறது.
சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் ரிலீஸாகி சுமாரான வரவேற்பை பெற்றது. அதனையடுத்து பாலாவின் வணங்கான் படத்தில் கமிட்டாகி அதிலிருந்து விலகிய சூர்யா; சிவாவின் கங்குவா படத்தில் நடிக்க கமிட்டானார். சிவா இயக்கிய அண்ணாத்த படம் படுமோசமான தோல்வியை சந்தித்ததன் காரணமாக சூர்யாவை வைத்தும் சிவா செய்துவிடுவாரோ என்றே ரசிகர்கள் ஓபனாக சமூக வலைதளங்களில் பேசினார்கள். ஆனாலும் படத்தின் மீது அவர்களுக்கு நம்பிக்கை ஒருபக்கம் இருக்கவும் செய்தது.

சூப்பர் அப்டேட்டுகள்: அந்த நம்பிக்கை பொய்த்துப்போகாத வகையில் படத்தின் க்ளிம்ப்ஸ், ட்ரெய்லர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், பெயர் என அனைத்துமே இருப்பதாக சூர்யாவின் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தனர். மேலும் சிவா சூர்யாவை வைத்து எந்த சொதப்பலும் செய்திருக்கமாட்டார் என்று நம்பிக்கையில் இருக்கிறார்கள் ரசிகர்கள். சூர்யாவின் கரியரிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் படம் என்பதும்; படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இரண்டு பாகங்கள் கங்குவா: கங்குவா படம் பீரியட் ஜானரில் உருவாவதாக முதலில் தகவல்கள் வெளியாகின. ஆனால் முழுக்க முழுக்க பீரியட் ஜானர் மட்டுமில்லை; தற்காலத்தில் நடக்கும்படியும் சிவா கதையை அமைத்திருக்கிறார் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி இரண்டு பாகங்களாக படம் உருவாகியிருப்பதாகவும்; அதன் ஷூட்டிங்கை மொத்தமாகவே சிவா முடித்துவிட்டார் என்றும் ஒரு தகவல் ஓடுகிறது. முக்கியமாக இப்படத்தில் கார்த்தியும் ஒரு ரோல் செய்திருப்பதாக பேசப்படுவது குறிப்பிடத்தக்கது.
ரஜினிக்கு மரியாதை: இப்படி எக்கச்சக்க ஹைப்போடு கங்குவாவுக்காக சூர்யா ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். முதலில் படமானது அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் அன்றைய தினம் ரஜினிகாந்த் நடித்திருக்கும் வேட்டையன் படம் ரிலீஸாவதால்; மூத்தவர் ரஜினிக்கு மரியாதை கொடுக்கும் விதமாக கங்குவா ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்படுவதாக சூர்யா ஒரு விழாவில் தெரிவித்திருந்தார். அதன்படி படமானது நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸாகும் என்று இன்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இசை வெளியீட்டு விழா: இந்நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்தின் இசை வெளியீட்டு விழா இந்த மாத இறுதியில் நடக்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. ஹை பட்ஜெட்டில் படம் உருவாகியிருப்பதன் காரணமாக கங்குவா இசை வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்துவதற்கு ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல் முழு மூச்சில் இறங்கியிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே இந்தப் படத்தின் சாட்டிலைட் உரிமை நல்லபடியாக வியாபாரம் செய்ததாக ஒரு பேச்சு ஓடுவது கவனிக்கத்தக்கது.


Click it and Unblock the Notifications











