கங்குவா ரசிகர்களுக்கு சின்ன ஆறுதல்.. முதல் நாள் பாக்ஸ் ஆஃபிஸில் ரஜினி, விஜய்யை முந்திய சூர்யா

சென்னை: கோலிவுட்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்குரிய படங்களில் ஒன்றாக இருந்தது கங்குவா. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான அந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். சிவா இயக்க சூர்யா ஹீரோவாகவும், திஷா பதானி ஹீரோயினாகவும் நடித்திருக்கிறார்கள். அனிமல் பட வில்லன் பாபி தியோல் வில்லனாக நடித்திருக்கிறார். எக்கச்சக்க ஹைப்போடு வெளியான கங்குவா படுதோல்வியை சந்தித்துவிட்டதாகவே பலரும் கூறிவருகிறார்கள். இதனால் படக்குழு கொஞ்சம் அப்செட்தான்.

அஜித்துக்கு வீரம், வேதாளம், விஸ்வாசம் ஆகிய சூப்பர் டூப்பர் ஹிட் படங்களை கொடுத்த சிவா சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார். கங்குவாவுக்கு முன்னதாக அவர் ரஜினியை வைத்து இயக்கிய அண்ணாத்த திரைப்படம் படுதோல்வியையும், கடுமையான ட்ரோலையும் சந்தித்தது. இதன் காரணமாக இந்தப் படத்தின் மூலம் அவர் தரமான கம்பேக் கொடுப்பார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். அதேபோல் சூர்யாவுக்கும் இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

kanguva suriya


உச்சக்கட்ட பேச்சு: படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா அந்த எதிர்பார்ப்பை இமயமலை உயரம் கொண்டு சென்றார். தான் அளித்த ஒரு பேட்டியில், 'இந்தப் படம் கண்டிப்பாக 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும். அதற்கான ஆதாரத்தை வெளியிடுவேன்’ என்றும்; 'கங்குவா படத்தின் முதல் பாகத்தை பார்த்த பிறகு இரண்டாம் பாகத்துடன் எந்தப் படத்தையும் போட்டிக்கு களமிறக்கமாட்டார்கள்’ என்றெல்லாம் கூறினார். அதுமட்டுமின்றி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிலேயே சக்சஸ் மீட் பற்றியும் பேசினார்.

சூர்யாவும் துணை: ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய ஞானவேல், 'கங்குவா படத்தின் சக்சஸ் மீட் டிசம்பர் மாதத்தில் நடக்கும். உலக அளவில் விநியோகஸ்தர்களை அழைத்து அந்த சக்சஸ் மீட் நடத்தப்படும். இந்த ஆடியோ வெளியீட்டு விழா பாஸை வைத்துக்கொண்டே அதற்கும் நீங்கள் வரலாம்’ என்று பேசினார். அவரைத் தொடர்ந்து இன்னொரு ப்ரோமோஷனில் பேசிய சூர்யா, 'கங்குவா படத்தை பார்க்கும்போது அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள்’ என்று கொளுத்திப்போட்டார்.

வாயை பிளந்த பாக்ஸ் ஆஃபிஸ்: படம் நேற்று ரிலீஸானது. முதல் நாள் முதல் காட்சியிலிருந்தே படத்துக்கு நெகட்டிவ் விமர்சனங்களே வந்துகொண்டிருக்கின்றன. மேக்கிங், திரைக்கதை, இசை என எதுவுமே தேறவில்லை என்று ஓபனாக அடிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். 2,000 கோடி ரூபாய் வசூலிக்கும் என்று கூறப்பட்ட கங்குவா முதல் நாளில் வெறும் 22 கோடி ரூபாய்தான் வசூலித்திருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் சூர்யா ரசிகர்கள் அப்செட்டாகியிருக்கின்றன.

ரஜினி, விஜய்யை முந்திய சூர்யா?: இருந்தாலும் அவர்களுக்கு ஆறுதல் அளிக்கும் விதமாக ஒரு தகவல் பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரத்தில் வட்டமடிக்கிறது. அதாவது கங்குவா படம் ஹிந்தியில் முதல் நாளில் மட்டும் நான்கு கோடி ரூபாய் வசூலித்திருப்பதாகவும்; இது ரஜினியின் வேட்டையன், விஜய்யின் GOAT ஆகிய படங்களின் முதல் நாள் ஹிந்தி வசூலைவிடவும் அதிகம் என்றும் கூறப்படுகிறது.

அதேசமயம் படத்தின் முதல் நாள் மொத்த வசூல் 22 கோடி ரூபாய் என்பது ரொம்பவே குறைவு. முதல் நாளில் இந்தப் படத்துக்கு தியேட்டரில் 30 முதல் 40 சதவீதம்தான் கூட்டம் வந்ததாகவும்; GOAT மற்றும் வேட்டையன் படத்துக்கு 50லிருந்து 60 சதவீதம்வரை கூட்டம் வந்ததாகவும் கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் சூர்யாவின் ஓபனிங் நாள் வசூலில் சிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தை (12 கோடி ரூபாய்) கங்குவா முறியடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X