எங்க பொழப்பே போச்சு.. சூர்யா குடும்பத்துக்கு எதிராக கொந்தளிக்கும் தயாரிப்பாளர்கள்.. அதுதான் காரணமா?

சென்னை: நடிகர் சூர்யா நடித்து வெளியான கங்குவா திரைப்படம் தமிழ் சினிமாவை தூக்கி நிறுத்தும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படுதோல்வியை சந்தித்து பான் இந்தியா ட்ரோல் மெட்டீரியலாக மாறிவிட்டது. கங்குவா படம் பல கோடி நஷ்டத்தை சந்தித்த நிலையில், திருப்பூர் சுப்ரமணியம் மற்றும் ஜோதிகா உள்ளிட்டோர் விமர்சனத்துக்கு எதிராக கொந்தளித்தனர்.

அதன் காரணமாக கடந்த 2 வாரங்களாக தியேட்டரில் வெளியான சிறு பட்ஜெட் படங்கள் ரிலீஸ் ஆனது கூட தெரியாமல் முதல் ஷோவிலேயே காலியான கொடுமை ஏற்பட்டு இருப்பதாக சிறு படங்களை தயாரித்து வெளியிட்ட தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் அந்த படங்களில் பணியாற்றியவர்களும் கொந்தளித்து வருகின்றனர்.

suriya kanguva public review

கங்குவா படத்திற்கு பிறகு வாழை, லப்பர் பந்து போன்ற படங்கள் வெளியாகி இருந்தாலும், வெற்றி பெறாமல் ஃப்ளாப் ஆகியிருக்கும் என்றும் கூறி வருகின்றனர். ஏகப்பட்ட சினிமா கலைஞர்களின் சாபம் சும்மா விடாது என்றும் கொந்தளித்து பேசி வருகின்றனர்.

கங்குவா தோல்வி: இந்த ஆண்டு இந்தியன் 2, வேட்டையன் மற்றும் கங்குவா உள்ளிட்ட படங்கள் தியேட்டரில் பெரிதாக வசூல் செய்யாமல் சொதப்ப காரணமே பப்ளிக் விமர்சனம் தான் என்றும் ரசிகர்கள் ஒரு படத்தை பிடித்திருக்கு, பிடிக்கவில்லை என்று நாகரீகமாகக் கூட விமர்சிக்கத் தெரியாமல் சூர்யாவை திட்டிப் பேசுவதும், தனி மனித தாக்குதல்களை செய்வதும் தவறு என கங்குவா தோல்விக்குப் பிறகு பப்ளிக் விமர்சனம் மற்றும் நெகட்டிவ் விமர்சனத்துக்கு எதிராக பலரும் கொந்தளித்தனர். திருப்பூர் சுப்ரமணியம் தியேட்டருக்குள் யூடியூப் சேனல்களை விடவேக் கூடாது என உத்தரவு போட்டது தற்போது சிறு பட்ஜெட் தயாரிப்பாளர்களுக்கும், தியேட்டர் ஓனர்களுக்கும் பெரிய தலைவலியாகி விட்டதாக கூறுகின்றனர்.

பப்ளிக் விமர்சனங்கள் தேவை: 4 முதல் 10 கோடி வரை சிறிய முதலீட்டில் படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பப்ளிக் விமர்சனங்களால் தான் அந்த படங்கள் வெளியாவதே ரசிகர்களுக்கு தெரியும் என்கின்றனர். சூர்யாவின் கங்குவா படத்தை போல இந்தியளவில் 20 முதல் 30 கோடி ரூபாய் வரை புரமோஷனுக்கு மட்டுமே செலவு செய்ய எங்களுக்கு வசதியில்லை என்றும் அப்படி புரமோஷன் செய்த படம் தரமாக இல்லாத நிலையில், மக்கள் அதனை தூக்கி எறிந்துவிட்டனர். அதனால், எங்களுடைய தரமான படங்கள் பாதிக்கலாமா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

யூடியூபர்கள் கூட்டம் காலி: பல சின்ன படங்களை முதல் நாளில் தியேட்டருக்குச் சென்று பார்த்துவிட்டு விமர்சனம் செய்வதே பல யூடியூப் சேனல்கள் தான். அவர்களின் கேமராக்களுக்கும் மைக்குகளுக்கும் அனுமதி இல்லை என்று சொன்னதும் அவர்களே பல படங்களுக்குச் செல்லாமல் போன நிலையில், கடந்த வாரம் வெளியான படங்களும் இந்த வாரம் வெளியான 9 படங்களும் பெரிதாக ரசிகர்கள் மத்தியில் எந்தவொரு ரீச்சும் இல்லாமல் படம் வெளியானதே தெரியாமல் முதல் ஷோவிலேயே காலியாகிவிட்டது என அந்த படங்களை தயாரித்த தயாரிப்பாளர்கள் தற்போது சூர்யா குடும்பத்துக்கு எதிராகவும் திருப்பூர் சுப்ரமணியத்துக்கு எதிராகவும் கொந்தளித்து வருகின்றனர்.

பொழப்பே போச்சு: சிறிய பட்ஜெட் படங்களை ஓடிடி நிறுவனங்கள் கூட சமீப காலமாக வாங்க யோசித்து வருகின்றன. தியேட்டர்களில் படம் வெளியானதும் அதை பார்த்துவிட்டு ரசிகர்கள் நல்லா இருக்கு என்று சொன்னால், அந்த மவுத் டாக் மூலமாக ஏகப்பட்ட படங்கள் மிகப்பெரிய வசூல் வேட்டையை இந்த ஆண்டு கூட நடத்திக் காட்டியுள்ளன. ஆனால், தற்போது அதற்கு தடை விதிக்கப்பட்டு இருப்பது தயாரிப்பாளர்களையும் தியேட்டர் ஓனர்களையும் பாதிக்கச் செய்திருப்பதாக கூறுகின்றனர்.நேற்று வெளியான சொர்க்கவாசல், பரமன், சாதுவன், மாயன், சைலன்ட், திரும்பிப்பார், குணா ரீ ரிலீஸ், பைரதி ரணகல் தமிழ் டப்பிங், செல்வந்தன் ரீ ரிலீஸ் போன்ற படங்கள் பெரிதாக மக்களை சென்றடையவில்லை என்கின்றனர். இதில், சொர்க்கவாசல் திரைப்படம் மட்டுமே ஓரளவுக்கு வசூலை அள்ளியிருக்கிறது. மழை பாதிப்பும் சேர்ந்துக் கொண்டு இந்த வாரம் வெளியான படங்களின் சோலியை 2வது நாளிலேயே முடித்துவிட்டது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X