Kanguva: பாகுபலியை விட பெரிய சம்பவம்.. 350 கோடி பட்ஜெட்.. 10,000 பேர் நடிக்கும் கங்குவா கிளைமேக்ஸ்!
சென்னை: சூர்யா, திஷா பதானி நடித்துள்ள கங்குவா திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் அந்த படத்தின் கிளைமேக்ஸ் காட்சி குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.
நடிகர் கார்த்தி காஷ்மோரா, பொன்னியின் செல்வன் என பீரியட் படங்களில் நடித்து விட்ட நிலையில், அண்ணன் சூர்யாவும் பீரியட் படத்தில் நடிக்கும் ஆர்வத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார்.

கடைசியாக பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் திரைப்படம் சொதப்பிய நிலையில், சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்து வருகிறார் சூர்யா. பாலாவின் வணங்கான் படத்தில் இருந்து வெளியேறிய சூர்யா அக்ஷய் குமாரை வைத்து இந்தியில் சூரரைப் போற்று இந்தி ரீமேக்கையும் தயாரித்து அதில் ஒரு கேமியோ ரோலிலும் இவர் நடித்துள்ளார்.
சிறுத்தை சிவா: கார்த்தியை வைத்து சிறுத்தை படத்தை இயக்கும் போதே சூர்யாவுக்கு படம் பண்ண பிட்டு போட்டு விட்டார் சிறுத்தை சிவா. ஆனால், அதன் பின்னர் அஜித்தின் படங்களான வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் படங்கள் வரிசையாக வர அஜித்துடன் பயணித்து வந்தார். பேட்ட படத்தை விஸ்வாசம் படம் பந்தாடிய நிலையில், சிறுத்தை சிவாவுக்கு அண்ணாத்த படத்தை இயக்கும் வாய்ப்பை ரஜினிகாந்த் வழங்கினார். ஆனால், சிறுத்தை சிவா சொதப்பி விட்டார்.
தீபாவளி ரிலீஸ்: ஜூன் மாதம் இந்தியன் 2, செப்டம்பர் மாதம் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம், அக்டோபர் மாதம் வேட்டையன் என ஒவ்வொரு மாதமும் பெரிய படங்கள் அடுத்தடுத்து வெளியாக காத்திருக்கின்றன. இந்நிலையில், தீபாவளி பண்டிகை முன்னிட்டு சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வெளியாகும் என்கிற அப்டேட்டை சமீபத்தில் தனஞ்செயன் கொடுத்திருந்தார்.
பான் இந்தியா டார்கெட்: கங்குவா படத்தின் இந்தி பெல்ட் பிசினஸை பெரியளவில் கொண்டு செல்லும் நடவடிக்கைகளில் ஸ்டூடியோ க்ரீன் ஞானவேல்ராஜா ஈடுபட்டு வருகிறார். 10க்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் கங்குவா திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தியா முழுவதும் வரும் தீபாவளிக்கு இந்த படம் வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
350 கோடி பட்ஜெட்: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் 200 கோடி ரூபாய் வசூலை கூட தொடாத நிலையில், சூர்யாவை வைத்து 350 கோடி ரூபாய் பட்ஜெட்டில் கங்குவா திரைப்படத்தை உருவாக்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. படத்தின் டீசரில் காட்டப்பட்ட புலி சிஜி புலி இல்லை என்றும் நிஜ புலி என்றும் படக்குழுவினர் தெரிவித்தனர்.
10,000 பேர்: கங்குவா படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்காக இதுவரை இல்லாத அளவுக்கு அதிகபட்சமாக 10,000 பேரை வைத்து சண்டைக்காட்சியை சிவா உருவாக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அனிமல் படத்தின் வில்லனான பாபி தியோல் இந்தப் படத்தில் உதிரன் என்னும் கதாபாத்திர சூர்யாவிற்கு வில்லனாக நடித்துள்ளார். பாலிவுட் நடிகை திஷா பதானி, ஜகபதி பாபு, நட்டி நடராஜ், ஆனந்த்ராஜ், கோவை சரளா, கே.எஸ். ரவிக்குமார் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. போர் காட்சிகள் பாகுபலி படத்தை விட பிரம்மாண்டமாகவும் ரியாலிஸ்ட்டாகவும் இருக்க வேண்டும் என்பதற்காக சிஜியில் ஆட்களை காப்பி பேஸ்ட் செய்யாமல், மொத்தமாக 10 ஆயிரம் பேரை வைத்து சிறுத்தை சிவா சண்டைக் காட்சியை படமாக்கி உள்ளதாக கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











