ஆட்டோ காசை கொடுங்க.. கங்குவா 2 பணத்தை ஆசிரமத்துக்கு கொடுத்துடுங்க.. கொதிக்கும் ஃபேன்ஸ்.. சூர்யா பாவம்

சென்னை: சூர்யா நடிப்பில் உருவாகியிருக்கும் கங்குவா திரைப்படம் இன்று உலகம் முழுவதும் 30 மொழிகளில் ரிலீஸாகியிருக்கிறது. மொத்தம் 10,000 திரைகளில் படம் திரையிடப்பட்டிருப்பதாக தகவல்கள் வருகின்றன. சூர்யா நடிப்பில் படம் வெளியாகி கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகியிருப்பதால் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு அவரது ரசிகர்கள் படம் பார்ப்பதற்கு படையெடுத்தனர். ஆனால் படத்துக்கு எதிர்பார்த்த விமர்சனம் கிடைக்கவில்லை. இந்தச் சூழலில் ரசிகர்கள் கங்குவாவை கழுவி ஊற்றும் வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது.

அண்ணாத்த படத்தை இயக்கி படுதோல்வியை சந்தித்த சிவா; சூர்யாவை வைத்து கங்குவா படத்தை இயக்கியிருக்கிறார். ஞானவேல் ராஜா ஹை பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க; தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்க திஷா பதானி, போஸ் வெங்கட், பாபி தியோல் உள்ளிட்டோர் படத்தில் நடித்திருக்கின்றனர். நிச்சயம் இந்தப் படம் சிவாவுக்கும், சூர்யாவுக்கும் மிகப்பெரிய வெற்றி படமாக அமையும் என்று அவரது ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்திருந்தார்கள். மேலும் ஞானவேல் ராஜாவும் தன்னுடைய பேட்டிகளில் படத்துக்கு ஓவர் ஹைப் ஏற்றிக்கொண்டிருந்தார்.

kanguva suriya

2000 கோடி ரூபாய் வசூல்: முக்கியமாக ஞானவேல் ராஜா கொடுத்த சில பேட்டிகளில் இந்தப் படம் கண்டிப்பாக 2000 கோடி ரூபாய் வசூலிக்கும்; அதற்கான ஆதாரத்தை நான் ஸ்டூடியோ க்ரீன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுவேன் என்று ஓவர் கான்ஃபிடன்ஸில் பேசிக்கொண்டிருந்தார். அதுமட்டுமின்றி சூர்யாவோ, கங்குவாவை பார்க்கும்போது ரசிகர்கள் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்றும் ஒருபடி மேலே சென்று பேசினார். இதனால் படத்துக்கு ரசிகர்களிடையே ஆவல் அதிகரித்தாலும்; சொதப்பிவிடுமோ என்ற அச்சம் ஒருபக்கம் இருந்துகொண்டிருந்தது.

இன்று ரிலீஸ்: படமானது இன்று உலக அளவில் ரிலீஸாகியிருக்கிறது. மொத்தம் 30 மொழிகளீல் 10,000 திரைகளில் படம் ரிலீஸாகியிருக்கிறது. சூர்யாவின் நடிப்பில் படம் வெளியாகி மூன்று வருடங்கள் ஆகிவிட்டதால் அவரது ரசிகர்கள் மிகப்பெரிய எதிர்பார்ப்போடு படம் பார்க்க தியேட்டர்களுக்கு படையெடுத்தனர். தமிழ்நாட்டின் சில மாவட்டங்களில் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் அவர்கள் தியேட்டருக்கு சென்று ஆவலோடு இருக்கைகளில் அமர்ந்தார்கள்.

அய்யோ கங்குவா: படத்தின் ஆரம்பத்திலிருந்தே ரசிகர்கள் தங்களது இருக்கைகளில் நெளிய ஆரம்பித்தார்கள். வாயை பிளந்து பார்ப்பார்கள் என்று சூர்யா சொன்னதெல்லாம் பொய் என்றானது. குறிப்பாக சூர்யாவின் ரசிகர்களுக்கே படம் பிடிக்கவில்லை. படத்தின் தொடக்கத்திலிருந்தே என்னமோ செய்திருக்கிறார்கள் ஆனால் என்ன செய்திருக்கிறார்கள் என்றுதான் தெரியவில்லை என்று தியேட்டரிலேயே கமெண்ட்ஸை பறக்கவிட்டார்கள். முதல் பாதிதான் அப்படி என்றால் இரண்டாம் பாதி அதைவிட மோசம் என்றும் கூறுகிறார்கள் ரசிகர்கள்.

கொதிப்பில் ரசிகர்கள்: இந்நிலையில் படம் பார்த்த கேரள ரசிகர்கள் படத்தை கழுவி ஊற்றியிருக்கிறார்கள். படம் பார்த்துவிட்டு வெளியே வந்த ரசிகர் ஒருவர், 'இந்தப் படத்தை பார்ப்பதற்காக நான் 450 ரூபாய் கொடுத்து ஆட்டோவில் வந்திருக்கிறேன். யார் அந்த ஆட்டோ காசை திருப்பி கொடுப்பார்கள். ஒழுங்காக அந்தப் பணத்தை கொடுத்துவிடுங்கள்' என்று கொந்தளிப்பில் பேசினார். அதனைப் பார்த்த தமிழ் ரசிகர்கள் உச்சக்கட்ட அதிர்ச்சியடைந்தனர்.

கங்குவா 2வா?: அதேபோல் இன்னொரு ரசிகர், 'என்னது இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்தை வேறு எடுக்கப்போகிறார்களா. ஒழுங்காக அந்தப் பணத்தை கொண்டு சென்று அனாதை குழந்தைகள் இருக்கும் இல்லத்துக்கு கொடுத்துவிடுங்கள். படம் ரொம்பவே கொடுமை' என்று கொந்தளித்துவிட்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியுள்ளது. இதனால் சூர்யா ரசிகர்கள் கொஞ்சம் அப்செட்டில் இருக்கிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X