Kanguva: சூர்யாவை முடிச்சிவிட்ட சிறுத்தை சிவா..ஆடியன்ஸை கதறவிட்ட கங்குவா.. சோலிமுடிஞ்சு போச்சு!
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் 'சிறுத்தை’ சிவா இயக்கத்தில் 200 கோடி ரூபாய் பட்டிஜெட்டில் 10க்கும் மேற்பட்ட மொழிகளில் கங்குவா திரைப்படம் நேற்று தியேட்டரில் வெளியானது. படத்தின் டிரைலர், சூர்யாவின் தோற்றம் எல்லாத்தையும் பார்த்து படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது, ஆனால், படம் பார்த்த ரசிகர்கள் சிறுத்தை சிவா, சூர்யாவை முடித்துவிட்டுவிட்டார் என ஆடியன்ஸ் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.
ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இத்திரைப்படம், பீரியட் படம் என்பதால் இப்படத்தின் மீது ரசிகர்களுக்கு எதிர்ப்பு இருந்தது. மேலும், டிரெய்லரில் சூர்யாவின் தோற்றமும், சண்டைக் காட்சிகளும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்தன.படத்தின் இசைவெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் சிறுத்தை சிவா, உலகம் முழுதும் 2,000 கோடி ரூபாய் வசூல் செய்யும் கூறியிருந்தார். அதே போல, சூர்யாவும் இந்திய திரையுலகமே படத்தை வியந்து பார்க்கப் போகிறது என்று பேசி இருந்ததால் படத்தை பார்க்கும் ஆர்வம் ரசிகர்களிடம் அதிகமாகவே இருந்தது.

சூர்யாவின் கங்குவா: இப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, நட்ராஜ், கோவை சரளா, கருணாஸ், போஸ் வெங்கட் ஜெகபதி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். கங்குவா படம் அக்டோபர் 10-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், அப்போது ரஜினிகாந்தின் வேட்டையன் படம் வெளியானதால் படம் தள்ளி வைக்கப்பட்டு நேற்று தியேட்டரில் படம் வெளியானது
படத்தின் கதை: கங்குவா படத்தின் கதை, ஆயிரம் ஆண்டுக்கு முன் மற்றும் நிகழ்காலம் என இருண்டு காலகட்டம் காட்டப்படுகிறது. நிகழ்காலத்தில் இருக்கும் சூர்யா கவர்மெண்டால் கூட கண்டுபிடிக்கமுடியாத குற்றவாளிகளைக் கண்டுபிடித்து கொடுக்கும் வேலை செய்து வருகிறார் சூர்யா. இதைத்தொடர்ந்து ஆயிரம் காலத்திற்கு முன் பெருமாச்சி எனும் பழங்குடி கிராமத்தின் தலைவராக கங்குவா இருக்கிறார். கங்குவா தீவை ரோமானியர்கள் தங்கள் வசப்படுத்த நினைக்கிறார்கள். இதனால், மக்களிடம் இன உணர்வை துண்டிவிடுகிறார்கள். அதே போல மற்றோர் இனக்குழுவின் தலைவரான பாபி தியோலிடம் இருந்து ஆபத்து வருகிறது. இருவருக்கும் நடக்கும் போரில் கங்குவா ஜெயித்தாரா.. இல்லையா என்பது தான் படத்தின் கதை.
மிரட்டிய சூர்யா: பிரான்சிஸில் சிறுவர்களை வைத்து ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்த தப்பி வரும் ஒரு சிறுவனை கண்டுபிடிக்கும் வேலை சூர்யாவிற்கு வருகிறது. அந்த சிறுவனை தொட்டதும் சூர்யாவிற்கு கடந்த காலம் பற்றிய நினைவு வருகிறது. ஒரு பழங்குடியின போர்வீரராக சூர்யா மிகவும் கடுமையாக உழைத்து ஸ்கோர் செய்து இருக்கிறார். படத்தின் காஸ்டியூம்,மேக்கப் இசை, VFX, சிஜி, என அனைத்து தொழில்நுட்ப கலைஞர்களும் படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கின்றனர். ஆனால்,படத்திற்காக உழைக்க வேண்டிய இயக்குநர் திரைக்கதையில் கோட்டைவிட்டுள்ளார்.
புலம்பும் பேன்ஸ்: நிகழ்கால சூர்யா ஏன் வருகிறார்,எதற்கு வருகிறார் என்பதே தெரியவில்லை, அந்த 15 நிமிட காட்சியை துக்கி இருந்தாலே நன்றாக இருந்து இருக்கும். சிறுத்தை சிவா அண்ணாத்தை படத்தை எடுத்து ரஜினியை முடிச்சிவிட்டது போல, கங்குவா படத்தை எடுத்து சூர்யாவை முடித்துவிட்டுள்ளார். அண்ணாத்த படத்திலாவது படம் பிடிக்கவில்லை என்றால், தூங்கமுடிந்தது. ஆனால், இந்த ஏய்... ஏய்...என வந்த சத்தத்தால் தூங்கக்கூட முடியவில்லை என்று படம் பார்த்தவர்கள் இணையத்தில் புலம்பி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











