Oscars 2025: கங்குவாவை துரத்திவிட்ட ஆஸ்கார்ஸ்.. மீண்டும் பல்பு வாங்கிய படக்குழு.. இணையவாசிகள் கலாய்!
சென்னை: இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, கார்த்தி, திஷா பதானி, யோகி பாபு, கருணாஸ், நட்டி உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகி கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆன படம் கங்குவா. ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்த இந்தப் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் தோல்விப் படமாக மாறியது. மேலும் படத்தின் பின்னணி இசை மிகவும் தரமற்றதாக இரைச்சலாக இருந்ததாகவும் ரசிகர்கள் விமர்சித்தனர். மோசமான விமர்சனங்களைச் சந்தித்த பின்னரும், படத்தினை ஆஸ்காருக்கு படக்குழு அனுப்பியது. ஆஸ்காரின் முதல் நாமினேஷன்ஸ் பட்டியலில் கங்குவா தேர்வானது. அதில் நூற்றுக்கும் மேற்பட்ட படங்களும் இடம் பெற்றது. ஆனால் தற்போது வெளியிடப்பட்டுள்ள ஆஸ்கார் நாமினேஷன்ஸ் பட்டியலில் கங்குவா படம் இடம் பெறவில்லை. இதனால் இணையவாசிகள் மீண்டும் கலாய்த்து வருகின்றனர்.
சூர்யா நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவான படம், கங்குவா. மொத்தம் இரண்டு பாகங்களாக உருவாக்க திட்டமிட்ட படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு நவம்பர் 14ஆம் தேதி ரிலீஸ் ஆனது. முதலில் படத்தை அக்டோபரில் ரிலீஸ் செய்ய திட்டமிட்ட படக்குழு, அதன் பின்னர் படத்தினை நவம்பர் மாதம் ரிலீஸ் செய்வதாக அறிவித்தது. படம் இந்தியா மட்டும் இல்லாமல் உலகின் பல்வேறு நாடுகளில் ரிலீஸ் ஆனது.

படம் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ரிலீஸ் ஆகி, கடுமையான நெகடிவ் விமர்சனங்களை எதிர் கொண்டது. குறிப்பாக படத்தின் திரைக்கதையில் பல்வேறு சொதப்பல்கள் இருந்தது. படத்தினை படக்குழு 3டி-இல் ரிலீஸ் செய்தது. படத்தில் சூர்யா மட்டும் இல்லாமல், பல்வேறு நடிகர்களின் உழைப்பு சிறப்பாகவே இருந்தது. ஆனாலும் படத்தின் திரைக்கதையில் பெரும் சொதப்பல் இருந்ததால், படம் கடுமையான விமர்சனங்களைப் பெற்றது.

கங்குவா: அதேபோல் படத்தின் பின்னணி இசை மிகவும் மோசமாக, இன்னும் சொல்லப்போனால், கடுமையான இரைச்சலாக இருந்தது. இது தொடர்பாக ரசிகர்கள் தொடங்கி, பல்வேறு விமர்சகர்கள் என பலரும் விமர்சித்தனர். குறிப்பாக இசையில் ஆஸ்கார் வாங்கிய, ரசூல் பூக்குட்டி, கங்குவா படத்தின் பின்னணி இசை குறித்து கடுமையாக சாடினார். படம் பாக்ஸ் ஆபிஸில் பெரும் தோல்விப் படமாக மாறியது.

ஆஸ்கார்: இப்படியான நிலையில் கங்குவா படக்குழு படத்தினை ஆஸ்காருக்கு அனுப்பியுள்ளது. அதிலும் குறிப்பாக படத்தின் நிகழ்கால போர்ஷனை மட்டும் ஒரு திரைக்கதையாக உருவாக்கி, படத்தை ஆஸ்காருக்கு அனுப்பியுள்ளது. முதல் சுற்றில் கங்குவா தேர்வானது. இது தொடர்பான அறிவிப்புகள் வந்தது. இது சூர்யா ரசிகர்களுக்கும் படக்குழுவினருக்கும் மகிழ்ச்சியைக் கொடுத்தது. இப்படியான நிலையில் தற்போது வெளியிடப்பட்டுள்ள நாமினேஷன்ஸ் பட்டியலில் கங்குவா இல்லை. அதேபோல் இந்தியா தரப்பில் அனுப்பப்பட்ட படங்களும் இடம் பெறவில்லை.

கலாய்: ஆஸ்கார் தரப்பில் இருந்து தற்போது வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் கங்குவா இடம் பெறாததால், இணையவாசிகள், பலரும், " நாங்கதான் அப்பவே சொன்னோம்ல, ஏன் இப்படி பல்பு வாங்கீட்டு இருக்கீங்க" என கங்குவா படக்குழுவினரைக் செம்மையாக கலாய்த்து இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். கங்குவா ஆஸ்காருக்கு தேர்வாகவில்லை என்ற தகவல் வேகமாக பரவி வருகின்றது.



Click it and Unblock the Notifications











