கேரக்டர் அப்டேட் கொடுத்தா ஓபனிங் சிறப்பா இருக்குமா.. வேட்டையன் படத்தை வம்பிழுத்த ஞானவேல் ராஜா!
சென்னை: நடிகர் சூர்யா லீட் கேரக்டரில் நடித்துள்ள கங்குவா படம் வரும் நவம்பர் 14ம் தேதி ரிலீசாகவுள்ள நிலையில் இந்த படத்தின் இசை வெளியீடு வரும் 20ம் தேதி திட்டமிடப்பட்டு வருகிறது. படத்தை ஸ்டூடியோ கிரீன் மற்றும் யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள நிலையில் படம் மிகப்பெரிய பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
கங்குவா படத்தை பிரபல இயக்குனர் சிவா இயக்கியுள்ள நிலையில் படத்தின் கதைக்களம் வரலாற்று ஜானரில் உருவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிகர் சூர்யாவுடன் திஷா பதானி மற்றும் பாபி தியோல் என ஒரு சிலரின் கேரக்டர்கள் மட்டுமே வெளிப்பட்டுள்ள நிலையில் இது குறித்து தற்போது தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா ரசிகர்களுடன் மேற்கொண்ட உரையாடலில் பேசியுள்ளார்.

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யாவின் கங்குவா படம் நவம்பர் 14ம் தேதி சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவிருந்த நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீசையொட்டி இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இயக்குநர் சிவா இயக்கியுள்ள இந்த படம் வரலாற்று பின்னணியில் மிகவும் சிறப்பான கதைக்களத்துடன் உருவாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் இந்திய அளவில் முதல் முறையாக மிகப்பெரிய பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது.
கங்குவா படம்: முன்னதாக கங்குவா படத்தின் டீசர், போஸ்டர்கள் உள்ளிட்ட சிலவற்றை மட்டுமே படக்குழுவினர் வெளியிட்டனர். படத்தின் அடுத்தடுத்த அப்டேட்டுகளுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இதனிடையே படத்தின் இசை வெளியீடு வரும் அக்டோபர் 20ம் தேதி மிகவும் பிரம்மாண்டமாக திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. பிரபல வாரயிதழுக்காக ரசிகர்களுடன் எக்ஸ் தளத்தில் நடந்த உரையாடலில் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா பேசியுள்ளார். அவரிடம் கங்குவா படம் குறித்த பல கேள்விகள் கேட்கப்பட்டன.
வேட்டையனை வம்பிழுத்த ஞானவேல் ராஜா: இதில் பேசிய சூர்யாவின் ரசிகர் ஒருவர், கங்குவா படத்தின் நடிகர், நடிகைகள் குறித்து ஒழுங்கான அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லையே என்று கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு பதிலளித்துள்ள ஞானவேல் ராஜா, சமீபத்தில் பெரிய நட்சத்திர பட்டாளத்துடன் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனியாக அப்டேட் கொடுத்து படம் ரிலீஸ் செய்ததை குறிப்பிட்டு பேசியுள்ளார். இது படத்தின் ஓப்பனிங்கிற்கு எந்தவகையிலாவது உதவியதா என்றும் கேள்வி எழுப்பியுள்ளார். கடந்த 10ம் தேதி திரையரங்குகளில் ரிலீசான ரஜினிகாந்தின் வேட்டையன் படம் மிகப்பெரிய ப்ரோமோஷன்களுடன் வெளியானது.
கேரக்டர் வீடியோக்கள்: முன்னதாக படத்தின் நடிகர் நடிகைகளும் மிகப்பெரிய பிரமோஷன்களை வேட்டையன் படத்திற்கு கொடுத்திருந்தனர். இதே போல ஒரு புறம் லைகா நிறுவனமும் படத்தின் ஒவ்வொரு நடிகர், நடிகையையும் குறிப்பிட்டு அவர்களுக்கான கேரக்டர் பெயர்களையும் வெளிப்படுத்தி தினந்தோறும் வீடியோ வெளியிட்டது. ஆனால் படம் தற்போது வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இதை சுட்டிக்காட்டியே தற்போது ஞானவேல் ராஜா தன்னுடைய பதிலாக தெரிவித்துள்ளார். படத்தின் கேரக்டர்களை வெளிப்படுத்துவதால் மட்டும் படத்தின் வெற்றிக்கு உபயோகம் ஏற்பட்டு விடாது என்று அவர் இதன்மூலம் குறிப்பிட்டுள்ளார். படத்தில் கதை ரசிகர்களை திரையரங்கிற்கு அடுத்தடுத்து வர வைக்கும் என்பதாக அவருடைய பதில் அமைந்துள்ளது.
தள்ளிப்போன கங்குவா ரிலீஸ்: முன்னதாக கங்குவா படம் அக்டோபர் 10ம் தேதி ரிலீசாகவிருந்த நிலையில், வேட்டையன் படத்தின் ரிலீஸ் தேதியும் அக்டோபர் 10ம் தேதி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்த ரேஸிலிருந்து கங்குவா படம் பின்வாங்கியது. தொடர்ந்து படத்தின் ரிலீஸ் தற்போது நவம்பர் 14ம் தேதிக்கு தள்ளிப் போயுள்ளது. மூத்த நடிகரான ரஜினிகாந்திற்கு மரியாதை தந்து, கங்குவா படத்தின் ரிலீஸ் தேதியை மாற்றியுள்ளதாக சூர்யாவும் முன்னதாக கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது அந்த கடுப்பைத்தான் ஞானவேல் ராஜா ரசிகர்களிடையே வெளிப்படுத்தியுள்ளாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











