கங்குவா எப்போது ரிலீஸ் தெரியுமா? தயாரிப்பாளர் தனஞ்செயன் கொடுத்த சூப்பர் அப்டேட்!

சென்னை: நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்து வருகின்றனர். யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்குகிறார். இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த மாஸ் அப்டேட்டை தயாரிப்பாளர் தனஞ்செயன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்

மிகப்பெரிய பட்ஜெட்டில் இரண்டு பாகமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் இசை உரிமையை பிரபல நிறுவனமான saregama south கைப்பற்றி உள்ளது. 3டி டெக்னாலஜியில் உருவாகி வரும் இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்பட 10க்கும் மேற்பட்ட மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது.

Suriyas kanguva movie release date will be announced soon

வில்லனின் புது போஸ்டர்: இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள பாபி தியோலின் போஸ்டர் அவரின் பிறந்த நாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டு இருந்தது. அனிமல் படத்துக்குப் பிறகு நடிகர் பாபி தியோலுக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டம் உருவாகி இருக்கும் நிலையில், அதை தக்கவைத்துக்கொள்ளும் வகையில் கங்குவா படத்திலும் இவருக்கு தரமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டுள்ளது. உதிரன் என பெயரிடப்பட்டுள்ள அவரது கதாபாத்திரத்தின் தோற்றம் ரசிகர்களிடையே கவனம் பெற்று வருகிறது.

படத்தின் ரிலீஸ் தேதி: இந்நிலையில் கங்குவா படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அப்டேட்டை தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார். அதில், கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும். சூர்யா சாருக்கு தெலுங்கு மற்றும் மலையாளத்தில் நல்ல மார்க்கெட் இருக்கிறது. ஞானவேல் ராஜா மற்ற மொழிகளில் படத்தை வெளியிட சரியான தேதியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்றார். இதன் மூலம் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத்தின் இசையிலும் உருவாகி வரும் கங்குவா படத்தின் ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பவர் ஆப் ஃபயர்: மேலும், கங்குவா படத்தின் தலைப்பு வெளியானபோது, கங்குவா என்றால் என்ன, அர்த்தம் என்ன என தெரிந்து கொள்ள இணையவாசிகள் இணையத்தில் வலைவீசி தேடினார்கள். ரஜினிகாந்த் நடித்த ஒரு இந்தி படத்தில் தலைப்பு இது என படத்தின் தலைப்பு குறித்து பல கருத்துக்கள் இணையத்தில் பரவியதால், கங்குவா என்பது படத்தில் நாயகனின் பெயர் என்றும் கங்கு என்றால் ஃபயர் என்றும் கங்குவா என்றால் பவர் ஆப் ஃபயர் என்று அர்த்தம் என்றும் இயக்குநர் விளக்கம் கொடுத்திருந்தார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X