Kanguva BO: நீங்க நம்பலனாலும் இதுதான் நிஜம்.. 3 நாளில் கங்குவா வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா?
சென்னை: சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் குவிந்து வருவதை எதிர்த்து நடிகை ஜோதிகா கண்டனம் தெரிவித்து போஸ்ட் ஒன்றை வெளியிட்டு இருந்தார். ஆனால், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் எந்தவொரு கவலையும் இல்லாமல் தொடர்ந்து பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை வெளியிட்டு தக் லைஃப் காட்டி வருகிறது.
ஞானவேல் ராஜா ரொம்பவே ஹேப்பியாக கங்குவா திரைப்படம் மெகா பிளாக்பஸ்டர் என போஸ்டர் அடித்து வெளியிட்டுக் கொண்டே இருக்கிறார். விமர்சனங்களை கடந்து மக்கள் கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு வருகின்றனர் என்றும் 3 நாளில் அதிகாரப்பூர்வமாக செய்துள்ள வசூல் அறிவிப்பையும் தற்போது வெளியிட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமையான இன்றும் நல்ல வசூல் வேட்டை நடத்தும் என்றும் சீக்கிரமே சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை கங்குவா முறியடித்த போஸ்டரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
சூர்யாவுக்காக பார்க்கும் ரசிகர்கள்: கங்குவா படத்தில் சூர்யா 47 வயதிலும் சிக்ஸ்பேக் வைத்துக் கொண்டு ரொம்பவே கஷ்டப்பட்டு நடித்துள்ளார். படம் முழுக்க அவரது நடிப்பை எங்கேயும் குறை சொல்லவே முடியவில்லை. பிரான்சிஸ் போர்ஷன் தான் கொஞ்சம் ஓவர்டோஸ் ஆகிவிட்டது. அங்கேயும் யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி காமெடி கைகொடுத்திருந்தால் படம் இன்னமும் அதிக வசூல் வேட்டை நடத்திருக்கும் என சூர்யா ரசிகர்கள் கூறுகின்றனர்.
கங்குவா 3 நாள் அதிகாரப்பூர்வ வசூல்: ஸ்டூடியோ க்ரீன் தயாரிப்பில் 300 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் உருவான சூர்யாவின் கங்குவா திரைப்படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் வெளியான இந்த படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக அனிமல் படத்தில் நடித்த பாபி தியோல் நடித்துள்ளார். கங்குவா திரைப்படம் சனிக்கிழமை வரை அதிகாரப்பூர்வமாக 127.64 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சற்றுமுன் அறிவித்துள்ளது.

சன்டே வசூல் எவ்வளவு?: ஞாயிற்றுக்கிழமையான இன்று கங்குவா திரைப்படம் மேலும், 23 கோடி ரூபாய் வசூலை உலகளவில் ஈட்டியிருந்தால் முதல் வாரத்திலேயே இந்த படம் 150 கோடி ரூபாய் வசூலை இன்றுடன் ஈட்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நாளை மீண்டும் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட்டை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் வெளியிடும் என்பது தெரிகிறது.
அமரன் வசூலை முந்துமா?: இதே வேகத்தில் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் சென்றால் அடுத்த வாரத்திற்குள் சூர்யாவின் கங்குவா திரைப்படம் சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் 250 கோடி வசூலை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்குள் அமரன் 300 கோடி வசூலை நெருங்கிவிட்டால் அதை கங்குவா முறியடிக்குமா? என்பது கேள்விக்குறிதான்.
கலாய்க்கும் ரசிகர்கள்: ஒரு பக்கம் ஸ்டூடியோ க்ரீன் நீங்க நம்பலனாலும் இதுதான் நிஜம் என பாக்ஸ் ஆபிஸ் வசூல் அறிவிப்புகளை தினமும் வெளியிட்டு வருகின்றனர். ப்ளூ சட்டை மாறன் உள்ளிட்டோர் ஜிஎஸ்டி பில்லை கேட்டு கலாய்த்து வருகின்றனர். எப்படியும் ஞானவேல் ராஜா 500 கோடி வரை போஸ்டர் ஒட்டாமல் ஓயாமாட்டார் போலத் தெரிகிறது என்றும் கங்குவா படம் அனைத்து இடங்களிலும் வாஷ் அவுட் ஆன பிறகும் எதுக்கு இந்த வடை என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











