Kanguva Review: ஓவர் பில்டப் உடம்புக்கு ஆகாது.. கங்குவா படம் பார்த்து கதறிய செய்யாறு பாலு!
சென்னை:சூர்யா நடிப்பில் இன்று, கங்குவா திரைப்படம் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டில் இன்று காலை 9 மணிக்கு படம் வெளியாகிய நிலையில், அண்டை மாநிலங்களான கேரளா. தெலங்கானா மற்றும் ஆந்திரா ஆகிய மாநிலங்களில் அதிகாலையிலே படம் வெளியானது. இப்படத்தை பார்த்த செய்யாறு பாலு படத்தின் விமர்சனத்தை கூறியுள்ளார்.
கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக கங்குவா... கங்குவா சோஷியல் மீடியாவில் அனைத்திலும் பேசப்பட்டு வந்த கங்குவா திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது.பல நூறு ஆண்டுகளுக்கு முன் என்ற டைட்டில் கார்டுடன் படம் ஆரம்பிக்கிறது. யார் வயிற்றில் பிறந்தோம், எதற்காக பிறந்தோம், எதற்காக வளர்ந்தோம் என்பது எல்லாம் அதுவாகவே நடக்கிறது அதை யாரும் எதுவும் சொல்ல முடியாது என்று கலைராணி கதை சொல்ல படம் ஆரம்பமாகிறது.

கங்குவா: இதையடுத்து 2024ம் ஆண்டுக்கு கதை வருகிறது. அதில், ரஷ்யாவில் சின்ன சின்ன குழந்தைகளுக்கு மூளைமாற்று சிகிச்சை, மெமரி பவர் என குழந்தைகளை வைத்து ஆராய்ச்சி பண்ணிட்டு வராங்க. அதுல இருந்து ஒரு பையன் தப்பிச்சு கோவாவிற்கு ஓடிவந்துவிடுகிறான். கோவால சூர்யா இருக்காரு, சூர்யாவோட வேலை என்னன்னா கவர்மெண்ட் போலீஸால பிடிக்க முடியாத குற்றவாளிகளை கண்டுபிடிச்சு கொடுப்பதுதான் அவருடைய வேலை இப்படித்தான் படத்தின் முதல் பாதி நகர்கிறது.
கங்குவா ஜெயிச்சாரா?இல்லையா?: இரண்டாம் பாதியில் மீண்டும் படம் ஆயிரம் வருஷத்திற்கு முன் செல்கிறது. அதில், ரோமானிய நாட்டுல இருந்து ஒரு படை இந்தியாவிற்குள் வந்து தங்களுடைய படை அமைப்பதற்கு ஒரு இடத்தை தேர்வு செய்கின்றனர். இந்த இடம் தான் கங்குவாவின் தீவு, அந்த இடத்தை பிடிப்பதற்காக அந்தத் தீவுக்குள்ள இருக்கிற ஆட்களை பணம் கொடுத்து செட் பண்ணி மக்களிடம் பிரிவினையை உருவாக்குகிறார்கள். இதனால், ஒரு இன மோதல் உருவாகி சூர்யாவுக்கும் பாபி தியோலுக்கும் இடையே அது சண்டையாகவே மாறுகிறது. கடைசியில் அந்த தீவை காப்பாற்றினார்களா? கங்குவா ஜெயிச்சாரா இல்லையா? என்பது தான் கங்குவா படத்தின் கதை.
படத்தின் பிளஸ்: இந்த படத்தை நான் பார்க்க வந்ததற்கு முக்கியமான காரணம் படத்தின் தயாரிப்பாளர் இந்த படம் நிச்சயமாக 2000 கோடி அடிக்கும் என்றார். அவர் அதுமட்டுமில்லாமல் சூரியாவும் இந்த படம் பார்க்கும்போது வாய பொளந்துட்டு பார்ப்பீங்கனு சொன்னாரு. அவர் சொன்னது போல,படத்துல வாயை பிளந்து பாக்குற அளவுக்கு நிறைய காட்சிகள் இருக்கு கிராபிக்ஸ் வந்து ரொம்ப அருமையா பண்ணி இருக்காங்க
மைனஸ்: இது போன்ற படங்கள் நிறைய படங்களை நாம் ஹாலிவுட்டில் பார்த்து இருப்போம், இந்திய சினிமாவிலும் இதுபோன்ற படம் வந்து இருக்கு. ஆனால், இந்த படம் தமிழுக்கு புதுசான படமா இருந்தாலும் படத்துல, சண்டை, சண்டை என ஓவர் டோஸ் இருப்பதால், படம் அலுப்பு தட்டின மாதிரி இருந்தது. அதே போல படத்துல சொல்லிக்கொள்ளும் அளவுக்கு எந்த விறுவிறுப்பான காட்சிகளும் இல்ல, ஒரு ரெண்டு சீன் மட்டும்தான் விறுவிறுப்பான காட்சிகள் இருந்தது. அது மட்டும் தான் பார்த்து ரசிக்கிறபடி இருந்தது. படத்திற்கு ஒரு வலுவான வில்லன் வேண்டும், அனிமல் படத்தில் இறங்கி ஸ்கோர் பண்ணி இருந்த பாபி தியோல் இந்த படத்தில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு இல்லை. ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் கங்குவா படக்குழு பில்டப் கொடுத்த அளவிற்கு இல்லை என்று செய்யாறு பாலு கூறியுள்ளார்.


Click it and Unblock the Notifications











