Kanguva: மிரட்டும் பிரம்மாண்டம்.. 2 கோடி பார்வையாளர்களை கடந்த 'கங்குவா' டீசர்!

சென்னை: 3டி முறையில் சரித்திரபடமாக உருவாகி வரும் கங்குவா திரைப்படம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. கடந்த 19ந் தேதி டீசர் வெளியான நிலையில் குறுகிய காலத்திலேயே 1.8 கோடி பார்வையாளர்களை பெற்று சூர்யாவின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

சூரைப்போற்று, ஜெய் பீம் படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வெளியான எதற்கும் துணிந்தவன் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதனால், சூர்யாவின் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் கங்குவா படத்தை அனைவரும் எதிர்பார்த்து காத்து இருக்கிறார்கள். சூர்யா நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமாக இருக்கும் இப்படத்தில், திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடிக்கின்றனர்.

Suriya s kanguva teaser crosses two crore views on youtube

சூர்யாவின் கங்குவா: யு.வி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஆதி நாராயணாவுடன் இணைந்து மதன் கார்க்கி இப்படத்திற்கு வசனங்களை எழுதியுள்ளார். மேலும், விவேகா மற்றும் மதன் கார்க்கி பாடல் வரிகளில் இணைந்து பணியாற்றியுள்ளனர். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார். 3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது.

2 கோடி பார்வையாளர்கள்: கங்குவா படத்தில், இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. ஃபேன்டஸி, முன்ஜென்மம், மறுபிறவி உள்ளிட்ட அம்சங்கள் இப்படத்தில் இருக்கலாம் என கூறப்பட்டு வரும் இப்படத்தின் டீசர் அண்மையில் வெளியானது. மும்பையில் நடந்த புகழ்பெற்ற கிராண்ட் அமேசான் பிரைம் வீடியோ இந்தியா நிகழ்வின் போது, நடிகர் சூர்யா நடித்த கங்குவா டீசர் கடந்த மார்ச் 19-ம் தேதி வெளியானது. டீசர் வெளியான குறுகிய காலத்தில் 1 புள்ளி 8 கோடி பார்வைகளைப் பெ ற்றுள்ளது என்பது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. மேக்கிங் மற்றும் விஎப்எக்ஸ் பணிக்காக உலகம் முழுவதிலுமிருந்து டீசருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X