கங்குவா டிரெய்லர் ரிலீஸ் தேதி.. கோட் படத்தை ஓவர்டேக் செய்யும் சூர்யா.. இதை எதிர்பார்க்கலல!
சென்னை: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட படமான கங்குவா திரைப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் குறித்த அப்டேட்டை சற்றுமுன் கங்குவா படக்குழுவினர் வெளியிட்டு சூர்யா ரசிகர்களை சந்தோஷத்தின் உச்சிக்கே கொண்டு சென்றுள்ளனர்.
ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் இந்த ஆண்டு தங்கலான் மற்றும் கங்குவா என விக்ரம் மற்றும் சூர்யா நடிப்பில் பிரம்மாண்ட படங்கள் உருவாகி வருகின்றன. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி பா. ரஞ்சித் இயக்கத்தில் சியான் விக்ரம் நடித்த தங்கலான் திரைப்படம் வெளியாக காத்திருக்கிறது.

சமீபத்தில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிலையில், அடுத்ததாக கங்குவா படத்தின் டிரெய்லர் வெளியிட்டு விழாவை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் ஏற்பாடு செய்திருக்கிறது.
கங்குவா டிரெய்லர் ரிலீஸ் தேதி: சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, அனிமல் படத்தில் வில்லனாக நடித்த பாலிவுட் நடிகர் பாபி தியோல் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கங்குவா திரைப்படத்தின் டிரெய்லர் வரும் ஆகஸ்ட் 12-ஆம் தேதி வெளியாகும் என்கிற அதிகாரப்பூர்வ அறிவிப்பை தற்போது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
கோட் படத்தை முந்துகிறதா?: அடுத்த மாதம் செப்டம்பர் 5-ஆம் தேதி விஜய் நடித்துள்ள கோட் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில், இன்னமும் அந்த படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் என எதுவுமே வெளியாகவில்லை. கடந்த மார்ச் மாதம் கங்குவா டீசர் வெளியான நிலையில், ஆகஸ்ட் 12 ஆம் தேதி டிரெய்லர் வெளியாகிறது. கோட் படத்தின் டிரெய்லர் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாகுமா? என்றும் கேள்விகள் எழுந்துள்ளன.
1000 கோடி இலக்கு: தமிழ் சினிமாவில் வெளியான பொன்னியின் செல்வன் மற்றும் ரஜினிகாந்தின் ஜெயிலர் மற்றும் விஜய்யின் லியோ படங்கள் செய்ய முடியாத சாதனையாக உள்ள 1000 கோடி ரூபாய் வசூலை சூர்யாவின் கங்குவா திரைப்படம் அள்ளி வரலாறு படைக்கும் என தனஞ்செயன் உள்ளிட்ட கங்குவா படக்குழுவினர் கூறி வருகின்றனர்.
சூர்யா vs கார்த்தி: கைதி 2 படத்தில் சூர்யாவும் கார்த்தியும் மோதுவார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கங்குவா படத்தின் கிளைமேக்ஸிலேயே கார்த்தி பாபி தியோலின் மகனாக வருவார் என்றும் 2ம் பாகத்துக்கான லீடாக அந்த காட்சி இருக்கும் என்றும் தகவல்கள் கசிந்துள்ளன.


Click it and Unblock the Notifications











