3 நாளில் பராசக்தி வசூலை முறியடித்து முதலிடத்தை பிடித்த சூர்யா.. சிங்கம் களமிறங்கிடுச்சு.. நம்பர் ஒன்!

சென்னை: 2026ம் ஆண்டு இதுவரை வெளியான படங்களிலேயே அதிக வசூலை பெற்ற தமிழ் படமாக சூர்யாவின் கருப்பு மாறியுள்ளது. வெறும் 3 நாட்களில் சுமார் 120 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டி மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியுள்ளது.

இந்த ஆண்டு வெற்றிபெறவில்லை என்றாலும் 140 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு 100 கோடி மட்டுமே வசூல் செய்த படமாக சிவகார்த்திகேயனின் பராசக்தி இதுவரை பாக்ஸ் ஆபீஸில் முதலிடத்தை பிடித்து வந்தது. இந்நிலையில், தி ஒன் வந்தால் மற்றவர்கள் ஒதுங்கித்தானே ஆக வேண்டும் என்பது போல சிவகார்த்திகேயனின் பராசக்தி வசூல் ரெக்கார்டை எண்ணி 3 நாட்களிலேயே சூர்யா முடித்து விட்டார்.

Suriya s Karuppu beats SK s Parasakthi Thaai Kizhavi and Ken Karunas Youth within 3 Days

படம் திட்டமிட்டபடி வியாழக்கிழமையே வெளியாகி இருந்தால் இந்நேரம் 150 கோடி வசூல் செய்து படத்தின் பட்ஜெட்டை விட அதிக வசூலை முதல் வாரத்திலேயே கொடுத்திருக்கும் என்கின்றனர்.

2வது பாதி சரியில்லை: கருப்பு படத்தின் முதல் பாதியில் கடவுள் கருப்புசாமி மனித மோடுக்கு வந்து ஆட்டத்தை ஆடுவது ஆர்ஜே பாலாஜியின் எழுத்து ஆற்றலை பாராட்ட வைத்தது. ஆனால், 2வது பாதியில் அவர் காட் மோடுக்கு செல்வது பெரிதாக ஈர்க்கவில்லை என்றும் லியோ, சிங்கம், எல்கேஜி என ஏகப்பட்ட ஈஸ்டர் எக்ஸ் வைத்து படத்தை ஆர்ஜே பாலாஜி பட்டி டிக்கெரிங் பார்த்து ஸ்கேம் செய்துவிட்டார் என சூர்யாவின் ஹேட்டர்கள் புலம்ப ஆரம்பித்துள்ளனர். முதல் பாதி போலவே 2வது பாதியும் இருந்திருந்தால், குண்டு சட்டியிலேயே குதிரை ஓட்டிவிட்டார் ஆர்ஜே பாலாஜி என்றும் படம் முழுக்க ஒரே கதையை சுற்றிக் கொண்டிருக்கிறது. கடவுள் சக்தி கான்செப்ட்டை வீண் அடித்து விட்டார் என சொல்லியிருப்பார்கள். ஆனால், 2வது பாதியில் இறங்கி அடித்ததால் தான் படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பி வருகிறது.

Suriya s Karuppu beats SK s Parasakthi Thaai Kizhavi and Ken Karunas Youth within 3 Days

பராசக்தி, தாய் கிழவி, யூத் ரெக்கார்ட் காலி: இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் இதுவரை அதிக வசூல் பெற்ற படங்கள் என்றால் அது சிவகார்த்திகேயனின் பராசக்தி 100 கோடி, தாய் கிழவி 90 கோடி வசூல் மற்றும் கென் கருணாஸ் நடித்த யூத் திரைப்படம் 82 கோடி வசூல் செய்தது தான் அதிகம். இதில், தாய் கிழவி, யூத் படங்கள் குறைந்த பட்ஜெட்டில் வெளியாகி மிகப்பெரிய வசூல் சாதனையை படைத்தன. இந்நிலையில், 3 நாட்களில் உலகளவில் 120 கோடி வசூலை ஈட்டி அனைத்து ரெக்கார்ட்டுகளையும் கருப்பு முறியடித்துள்ளது.

300 கோடி வருமா?: சூர்யாவுக்கு கண்டிப்பாக கருப்பு திரைப்படம் முதல் 200 கோடி வசூல் படமாக மாறும் என்கின்றனர். அஜித் குமாரின் குட் பேட் அக்லி படத்தின் வசூலை மட்டுமின்றி சிவகார்த்திகேயனின் அமரன் படத்தின் வசூலையும் கருப்பு முறியடிக்கும் என சூர்யா ரசிகர்கள் ரொம்பவே நம்பிக்கையுடன் உள்ளனர். இந்த மாதமும் எந்தவொரு பெரிய படமும் வெளியாகாத சூழலில் அடுத்து தமிழ் சினிமாவில் பெரிய படம் என்றால் அது ஜன நாயகன் மட்டுமே அதுவரை கருப்பு கல்லா கட்டினால் 300 கோடி வசூலை கடக்கும் வாய்ப்பும் உள்ளது என்கின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X