Karuppu Box Office: அடிச்சு தூக்கு சாமி.. தமிழ்நாட்டில் 100 கோடியை தாண்டிய கருப்பு.. சூர்யா சம்பவம்!
சென்னை: சூர்யா நடித்த படங்கள் 100 கோடி வசூல் வரவே தடுமாறிக் கொண்டிருப்பதாக தொடர்ந்து கடந்த சில வருடங்களாக பலர் ட்ரோல் செய்து வந்த நிலையில், தமிழ்நாட்டிலேயே 100 கோடி வசூல் செய்து மிகப்பெரிய சாதனை செய்துள்ளது சூர்யா நடித்த கருப்பு படம்.
எல்கேஜி, மூக்குத்தி அம்மன் என ஆர்ஜே பாலாஜி தனது கதைகளின் மூலம் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். சூர்யாவுக்கு செம ஹிட் படத்தைக் கொடுக்க வேண்டும் என கருப்பு படத்தை பக்காவாக உருவாக்கி அவர் இயக்கினாலும், இந்த படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் பலர் தடுத்து வந்தனர்.

சூர்யா நடித்து வெளியான முந்தைய படங்கள் மற்றும் கார்த்தி நடிப்பில் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸில் வெளியான படங்கள் சொதப்பிய நிலையில், தான் கடன் தொல்லை காரணமாக கருப்பு படம் வெளியாக முடியாத சூழல் இருந்தது. சூர்யா தான் வாங்கிய சம்பள பணத்தை எல்லாம் திருப்பிக் கொடுத்து படத்தை வெளியிட உதவினார் என்று கூறப்பட்டது. தற்போது அனைத்துக்கும் வட்டியும் முதலுமாக லாபம் குவிந்து வருவதால் படக்குழு மற்றும் சூர்யா குடும்பத்தினர் சந்தோஷத்தில் உள்ளனர்.
தமிழ்நாட்டில் 100 கோடி: விஜய்யின் லியோ மற்றும் மணிரத்னம் இயக்கத்தில் ரவி மோகன், சியான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா நடித்த பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்கள் தான் தமிழ்நாட்டில் அதிகபட்சமாக 219 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளன. ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படம் 190 கோடி வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. கமல்ஹாசனின் விக்ரம் திரைப்படம் 180 கோடி வசூலை தமிழ்நாட்டில் கடந்துள்ளது. இந்நிலையில், அந்த வரிசையில் சூர்யாவின் கருப்பு படம் இடம்பிடித்துள்ளது.
சந்தோஷத்தில் சக்தி ஃபிலிம் ஃபேக்டரி: ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா நடித்த கருப்பு திரைப்படம் 8 நாட்களில் அதிரடியாக தமிழ்நாட்டில் 100 கோடி வசூலை கடந்துள்ளதாக படத்தை தமிழ்நாட்டில் வாங்கி ரிலீஸ் செய்த சக்தி ஃபிலிம் ஃபேக்டரி தற்போது சந்தோஷத்துடன் போஸ்ட் போட்டுள்ளனர். உலகளவில் 207 கோடி வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் நேற்று அறிவித்த நிலையில், தமிழ்நாட்டிலும் அதிக வசூல் ஈட்டி கருப்பு சாதனை படைத்துள்ளது. தமிழ் சினிமாவில் இன்னும் ஒரு மாதத்துக்கு எந்தவொரு பெரிய படமும் ரிலீஸ் ஆகாத சூழலில் தொடர்ந்து கருப்பு படம் ஓடினால் உலகளவிலும் தமிழ்நாட்டிலும் மிகப்பெரிய வசூல் சாதனையை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications