Karuppu Day 2 BO: கல்லா கட்டும் கருப்பு.. 2வது நாள் இப்போவே ஆல் ஷோஸ் ஹவுஸ்ஃபுல்.. சூர்யா சுனாமி!

சென்னை: ஜெயிலர் மற்றும் லியோ படங்களுக்குப் பிறகு புக் மை ஷோ உள்ளிட்ட டிக்கெட் புக்கிங் தளங்களில் ஒரு மணி நேரத்துக்கு அதிக டிக்கெட்டுகள் முன்பதிவாகும் படமாக 3வது இடத்தில் தற்போது சூர்யாவின் கருப்பு படம் மாறியுள்ளது.

தமிழ்நாட்டில் மட்டுமின்றி ஆந்திரா, தெலங்கானா மற்றும் கேரளாவிலும் சூர்யா படத்தை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிங்கம் 2 படத்துக்குப் பிறகு சூர்யா நடித்து வெளியான படங்கள் தியேட்டர்களில் பெருமளவில் ரசிகர்களை கவரவில்லை என்கிற குற்றச்சாட்டுக்களை ஆர்ஜே பாலாஜி இயக்கி நடித்துள்ள கருப்பு படம் முறியடித்துள்ளது.

Suriya s Karuppu Day 2 Box Office Ticket Booking Status and Predictiions are here
Photo Credit:

முதல் நாளில் உலகளவில் 20 கோடி வசூல் செய்த நிலையில், 2வது நாளான இன்று அனைத்து தியேட்டர்களும் ஹவுஸ்ஃபுல் போர்டுகளை மாட்டத் தொடங்கியுள்ளன. பல தியேட்டர்கள் ஆரஞ்சு அலர்ட்டாக உள்ளது. நேற்று மாலை மற்றும் நள்ளிரவு காட்சிகளில் ரசிகர்கள் சாமியாட்டம் ஆடிய வீடியோக்கள் ஒட்டுமொத்த மக்களையும் குடும்பம் குடும்பமாக சூர்யா படத்தை பார்க்க வரவழைத்துள்ளது.

கல்லா கட்டும் கருப்பு: காந்தாரா, ஹனுமான் என சிறு பட்ஜெட்டில் சாமியை வைத்து மற்ற மொழிகளில் எடுத்த படங்கள் எல்லாம் பெரிதாக பாக்ஸ் ஆபீஸில் கல்லா கட்ட ரன்பீர் கபூர், யஷ், சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக ராமாயணா படம் 2000 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது. மகேஷ் பாபுவை வைத்து ராஜமெளலி வாரணாசி படத்தை 1200 கோடி பட்ஜெட்டில் எடுத்து வருகிறார். கோலிவுட்டில் இப்படியெல்லாம் படங்கள் வெளியாகவில்லையே என ரசிகர்கள் ஃபீல் செய்துக் கொண்டிருந்த நிலையில், சரியான நேரத்தில் கருப்பசாமியை வைத்து சூர்யா நடித்துள்ள கருப்பு படம் பாக்ஸ் ஆபீஸில் மிகப்பெரிய கல்லா கட்ட ஆரம்பித்துள்ளது. முதல் நாளே உலகளவில் 20 கோடி வசூல் சாதனை செய்துள்ளதாக சாக்னிக் தெரிவித்துள்ளது.

Suriya s Karuppu Day 2 Box Office Ticket Booking Status and Predictiions are here
Photo Credit:

2வது நாள் வசூல் கணிப்பு: ஏகப்பட்ட தியேட்டர்கள் இப்போதே சனி மற்றும் ஞாயிறுக்கான காட்சிகள் அரங்கு நிறைந்து காணப்படுகிறது. தனுஷின் கர, ரத்னகுமாரின் 29 உள்ளிட்ட படங்கள் ஓடிக் கொண்டிருந்த தியேட்டர்களும் தற்போது சூர்யாவின் கருப்பு படத்தை போட முடிவு செய்து கூடுதல் காட்சிகள் ஒதுக்கப்பட்டு வருகிறது. கங்குவா, ரெட்ரோ படங்கள் எல்லாம் முதல் நாளே திணறிய நிலையில், 2வது நாள் எல்லாம் பாக்ஸ் ஆபிஸில் பலத்த அடி வாங்கின. ஆனால், சூர்யாவின் கருப்பு படம் சுனாமி போல தியேட்டர்களை ஆட்சி செய்து வரும் நிலையில், 2வது நாள் உலக வசூல் அதிகபடியாக 30 முதல் 35 கோடி வரை வரும் என கணிப்புகள் வெளியாகி உள்ளன. 2 நாட்களில் 50 கோடி வசூலை ஒட்டுமொத்தமாக கருப்பு படம் கடக்கும் என்றும் ஞாயிற்றுக்கிழமையோடு சேர்த்தால் மிகப்பெரிய ஓபனிங் கிடைக்கும் என்கின்றனர்.

200 - 300 கோடி வசூல்: சூர்யாவின் கருப்பு திரைப்படம் இதே வேகத்தில் இன்னும் ஒரு வாரம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடினால் அதிகபட்சமாக 200 முதல் 300 கோடி வசூலை ஈட்டி சூர்யாவுக்கு பல வருடங்கள் கழித்து மிகப்பெரிய பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை ஈட்டித் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கருப்பு படத்தின் வெற்றி அடுத்து வெளியாகவுள்ள விஸ்வநாத் அண்ட் சன்ஸ் படத்துக்கும் பக்க பலமாக இருக்கும் என்றும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X