சூர்யாவின் ‘கருப்பு‘ படத்தின் ‘ராத்த ராசன்‘ பாடல் வெளியானது!

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் திரைப்படம்கருப்பு'. இப்படம் மே மாதம் 14ந் தேதி வெளியாக இருக்கும் நிலையில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மூன்றாவது பாடலானராத்து ராசன்' பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ட்ரீம் வாரியர்ஸ் தயாரிப்பில் சூர்யாவின் 45வது படமான கருப்பு படம் உருவாகியுள்ளது. கருப்பு படம் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிப்பு வெளியானது. ஆனால், பின் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, பொங்கலுக்கு படம் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், படம் வெளியாகாததால் ரசிகர்கள் கவலை அடைந்தனர். இதையடுத்து, கருப்பு படம் ஓடிடியில் விற்பனையாகவில்லை என்றும், ஆர்.ஜே.பாலாஜிக்கும், தயாரிப்பாளர் எஸ்.ஆர் பிரபுக்கு இடையே சண்டை என பல தகவல்கள் இணையத்தில் பரவியது.

Suriya Karuppu song
Photo Credit:

கருப்பு: இந்த படத்தில் த்ரிஷா, இந்திரன்ஸ், ஸ்வாசிகா, அனகா மாயா ரவி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜி.கே.விஷ்ணு, இசையமைப்பாளராக சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இதையடுத்து, மே 14ந் தேதி இப்படம் வெளியாக இருக்கும் நிலையில், படத்தின் முதல் பாடலான God Mode கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியானது. அதனை தொடர்ந்து இரண்டாவது சிங்கிளாக நாங்க நாலு பேரு' பாடல் கடந்த மாதம் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராத்து ராசன்' பாடல் தற்போது வெளியாகி உள்ளது. இந்த பாடலை வி.எம். மகாலிங்கம், பால் டாபா ஆகியோர் பாடி உள்ளனர்.

விஸ்வநாத் அண்ட் சன்ஸ்: கருப்பு படத்தை தொடர்ந்து, வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா, மமிதா பைஜு, ராதிகா சரத்குமார் ஆகியோர் நடத்திருக்கும் படம் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்'. சிதாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கும் இத்திரைப்படம் ஜூலை மாதம் ரிலீஸாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X