எனக்கு இன்னொரு பேர் இருக்கு.. வெளியானது சூர்யாவின் கருப்பு டீசர்.. அதிரடி சரவெடிதான்

சென்னை: ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்திருக்கும் கருப்பு திரைப்படம் எதிர்பார்ப்புகளை சம்பாதித்திருக்கிறது. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். முதன்முறையாக பாலாஜியுடன் சூர்யா இணைந்திருக்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியான சூழலில்; இன்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டீசர் வெளியாகி கவனம் ஈர்த்திருக்கிறது.

திரையரங்குகளில் வெளியான சூர்யாவின் படங்கள் ஹிட்டாகி சில வருடங்கள் ஆகின்றன. பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்த எதற்கும் துணிந்தவன் சுமாரான வரவேற்பை பெற்றது. அடுத்ததாக சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பிரமாண்ட பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. 2,000 கோடி ரூபாய்வரை வசூலிக்கும் என்று படக்குழு ஏகப்பட்ட ஹைப்புகளை ஏற்றி வைத்தது.

கங்குவா டூ ரெட்ரோ: ஆனால் படம் எதிர்பார்த்த வெற்றியையும் பெறவில்லை; படக்குழு சொன்ன நம்பரையும் வசூலிக்கவில்லை. முக்கியமாக தோல்வி என்பதோடு மட்டுமின்றி கடுமையான ட்ரோலையும் படம் சந்தித்தது. இப்படத்தால் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் நஷ்டம் என்றே சொல்லப்படுகிறது. இப்படத்துக்கு பிறகு அவர் நடித்த ரெட்ரோ திரைப்படமும் தியேட்டர்களில் அப்படி ஒன்றும் ரெஸ்பான்ஸை பெறவில்லை.

Suriya s Karuppu Movie Teaser Was Out Now
Photo Credit:

ஆர்.ஜே.பாலாஜியுடன் கருப்பு: இந்த இரண்டு படங்களில் நடித்துக்கொண்டிருந்தபோதே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் கருப்பு படத்தில் நடிக்க கமிட்டாகிவிட்டார் சூர்யா. பாலாஜி இதுவரை இயக்கிய எல்கேஜி, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்கள் சூப்பர் ஹிட்டடித்திருக்கின்றன. இதன் காரணமாக சூர்யாவை வைத்து கண்டிப்பாக தரமான சம்பவமாக ஆர்.ஜே செய்வார் என்று ரசிகர்கள் ரொம்பவே ஆவலோடு நம்பிக்கொண்டிருக்கிறார்கள்.

வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்: முதலில் இப்படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து விலகினார். அவர் விலகியதை அடுத்து சாய் அபயங்கர் இசையமைப்பாளராக கமிட்டாகியிருக்கிறார். சூழல் இப்படி இருக்க நேற்று படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்றது. இருப்பினும் சூர்யா ரசிகர்கள் அதனை கொண்டாடவே செய்கிறார்கள்.

கருப்பு டீசர்: சூர்யா இன்று தனது 50ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி கருப்பு படத்தின் டீசர் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று டீசர் வெளியாகியிருக்கிறது. இப்படத்தில் சூர்யா வழக்கறிஞர் கதாபாத்திரத்தை ஏற்றிருக்கிறார். மேலும் டீசரில், சமூகத்தில் நடக்கும் கெட்டவைகளை தட்டி கேட்கும்படியாக காட்சிகள் அமைக்கப்பட்டிருக்கின்றன. முக்கியமாக படம் முழுக்க ஆக்‌ஷன் சரவெடி ட்ரீட்டுக்கு பஞ்சம் இருக்காது என்பதையும் இந்த டீசர் உறுதிப்படுத்தி ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X