Karuppu Box Office: 300 கோடி வசூலை நெருங்கிய கருப்பு.. பாக்ஸ் ஆபீஸில் சும்மா நெருப்பா இருக்கும் சூர்யா!

சென்னை: ட்ரீம் வாரியர் பிக்சர்ஸின் கடன்களை எல்லாம் கருப்பசாமி தீர்த்து வைத்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். முதன்முறையாக சூர்யா படம் 300 கோடி வசூலை நெருங்கியுள்ளது. ஆர்ஜே பாலாஜி சொன்னதை போலவே செய்து காட்டி அசத்தி விட்டார். கண்டிப்பாக இந்த படத்தில் விஜய் நடித்திருந்தால் 800 முதல் 1000 கோடி வரை வசூல் வந்திருக்கும் என்று கூறுகின்றனர்.

சிங்கம் 2 படத்திற்கு பிறகு சூர்யாவின் சிங்கம் 3 திரைப்படம் எதிர்பார்த்த பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெறவில்லை. கொரோனா காலக்கட்டத்தில் சூரரைப் போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட படங்கள் ஓடிடியில் நேரடியாக வெளியானது சூர்யாவுக்கு பாக்ஸ் ஆபீஸில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.

Suriya s Karuppu Worldwide Box Collection Nears 300 Crores
Photo Credit:

300 கோடி பட்ஜெட்டில் கங்குவாவை மலைபோல நம்பி உருவாக்கினார். ஆனால், அந்த படம் மிகப்பெரிய டிசாஸ்டராக மாறியது.

எல்லைகளை கடந்து மாபெரும் வெற்றி: கருப்பு படத்திலேயே கருப்பசாமிக்கு ஒரு எல்லை வரை தான் பவர் இருக்கும் என்பது போல ஆர்ஜே பாலாஜி படத்தை இயக்கினாலும், அடுத்த எல்லையில் இன்னொரு கருப்பசாமி இருப்பார் என்பதையும் படத்தில் வைத்து மாஸ் காட்டியிருந்தார். பாக்ஸ் ஆபீஸிலும் தற்போது ஆல் ஏரியா கருப்பசாமியும் சேர்ந்து படத்தை வெற்றிப் பெற வைத்துள்ளனர் என்று ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். காந்தாரா படத்தை போல நம்ம ஊரில் ஒரு படம் வராதா? என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு சரியான பதிலாக கருப்பு படம் வெளியாகி உள்ளது.

300 கோடி வசூலை நெருங்கிடுச்சு: கருப்பு திரைப்படம் கடந்த மே 15ம் தேதி வெளியான நிலையில், நேற்று ஞாயிற்றுக்கிழமையும் படம் பாக்ஸ் ஆபீஸில் பட்டையை கிளப்பியது. அதிகபட்சமாக உலகளவில் 289 கோடி ரூபாய் வசூலை கருப்பு படம் ஈட்டியிருப்பதாக சாக்னிக் தெரிவித்துள்ளது. திங்கட்கிழமையான இன்றும் கருப்ப் படத்துக்கு நல்ல வரவேற்பு உள்ளது. மேலும், இந்த வாரமும் பெரிய போட்டி தமிழ் சினிமாவில் இல்லாத நிலையில், கருப்பு படம் செவ்வாய் அல்லது புதன் கிழமையுடன் 300 கோடி பாக்ஸ் ஆபீஸ் கிளப்பில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ட்ரீம் வாரியர்ஸ் இன்றே கருப்பு 300 கோடி போஸ்டரை வெளியிட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கு இல்லை என்கின்றனர். இந்தியாவில் மட்டும் 173 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளது என்கின்றனர். ஓவர்சீஸில் 115 கோடி வரை வசூல் ஈட்டியுள்ளதாம். விரைவில் இந்தியாவில் 200 கோடி வசூலையும் உலகளவில் 350 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

எகிறிய சூர்யா மார்க்கெட்: பல ஆண்டுகளாக சூர்யா மார்க்கெட் ரொம்பவே அடிவாங்கிய நிலையில் இருந்து வந்தது. கருப்பு படத்துக்கே அவருக்கு சம்பளம் வெறும் 40 கோடி தான் என்கின்றனர். அந்த 40 கோடி ரூபாயை கூட படம் வெளியாவதற்காக சூர்யா கொடுத்து உதவியதாகவும் தகவல்கள் கசிந்துள்ளன. இந்நிலையில், கருப்பு படம் 300 கோடி வெற்றிப் பெற்ற நிலையில், சூர்யாவின் சம்பளமும் சிவகார்த்திகேயன் அளவுக்கு 60 கோடிக்கு மேல் அதிகரிக்கும் என்கின்றனர். விரைவில் அஜித் குமாரை போல 100 கோடி சம்பளத்துக்கு உயர்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், சம்பளத்தை உயர்த்தாமல் ஷேர் அடிப்படையில் சூர்யா சம்பளம் வாங்கினால் தயாரிப்பாளர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் அவருக்கும் நல்ல லாபம் வரும் என்றும் கூறுகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X