Suriya - விஜய், சிவகார்த்திகேயனை ஃபாலோ செய்யும் சூர்யா?.. அடுத்த திட்டம் இதுவா?

சென்னை: Suriya Next Movie (சூர்யாவின் அடுத்த படம்) சூர்யா தெலுங்கு இயக்குநரின் இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

சூர்யாவின் நடிப்பில் கடைசியாக எதற்கும் துணிந்தவன் படம் ரிலீஸானது. பாண்டிராஜ் இயக்கியிருந்த அந்தப் படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இந்தச் சூழலில் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிப்பதற்கு கமிட்டானார் சூர்யா. ஸ்டூடியோ க்ரீன் சார்பில் ஞானவேல் ராஜா படத்தை தயாரித்திருக்கிறார்.எதற்கும் துணிந்தவன் கலவையான விமர்சனத்தை பெற்றதால் இந்தப் படம் மீது பெரும் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Suriyas Next Movie With Telugu Director Boyapathi Srinu

பிரமாண்ட கங்குவா: இந்தப் படமானது 100 கோடி ரூபாய்க்கும் மேலான பட்ஜெட்டில் தயாராகிறது. அதுமட்டுமின்றி மொத்தம் பத்து மொழிகளில் 3டியில் பிரமாண்டமாக ரிலீஸ் ஆகிறது. இதுவரை சூர்யா நடித்த படங்களிலேயே இந்தப் படம்தான் அதிக பட்ஜெட் என்பது; இதுதான் பத்து மொழிகளில் வெளியாகும், முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனால் சூர்யாவின் ரசிகர்கள் உற்சாகத்தில் இருக்கின்றனர்.

நிரூபிப்பாரா சிவா?: அதேசமயம் சிவா கடைசியாக இயக்கிய அண்ணாத்த படம் படுதோல்வியடைந்தது. அதுமட்டுமின்றி சிவா கிராமத்து பாணியிலான கதைகளை இயக்குபவர். ஆனால் கங்குவா படமோ பீரியட் படமாக உருவாகிறது. எனவே கங்குவா படத்தை சிறப்பாக கொடுத்து தன்னை அவர் நிரூபிப்பாரா என்ற கேள்வியை சூர்யாவின் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கேட்டனர்.

க்ளிம்ப்ஸ்: சில மாதங்களுக்கு முன்பு சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா படத்தின் க்ளிம்ப்ஸ் வெளியிடப்பட்டது. க்ளிம்ப்ஸை பார்த்த ரசிகர்கள் தங்களது சந்தேகத்தை சிவா அடித்து நொறுக்கிவிட்டார். அவ்வளவு அட்டகாசமாக இருக்கிறது என மகிழ்ச்சியை வெளிப்படுத்திவருகின்றனர்.

சூர்யா 43: இந்தப் படத்தை முடித்த பிறகு சூர்யா அடுத்ததாக சுதா கொங்கரா இயக்கத்தில் நடிக்கவிருக்கிறார். ஏற்கனவே இவர்கள் கூட்டணியில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் மெகா ஹிட்டாகி தேசிய விருதுகளை அள்ளியது. எனவே அவர்கள் இணையவிருக்கும் புதிய படத்தின் மீதும் அபரிமிதமான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் எழுந்திருக்கிறது. மேலும் இந்தப் படத்தில் மாதவன் கேமியோ ரோலில் நடிக்கலாம் என்றும் துல்கர் சல்மான் முக்கியமான ரோலில் நடிக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தெலுங்கு இயக்குநருடன்?: இந்நிலையில் சூர்யாவின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அவர் தெலுங்கு இயக்குநர் போயபதி ஸ்ரீனு இயக்கத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது. சுதா கொங்கரா படம், வாடிவாசல் படம் ஆகியவைகளை முடித்துவிட்டு இந்தப் படத்தில் அவர் நடிக்கலாம் என தெரிகிறது. போயபதி ஸ்ரீனு தெலுங்கில் அகண்டா உள்ளிட்ட ஹிட் படங்களை கொடுத்து தற்போது சென்சேஷனல் இயக்குநராக இருக்கிறார். இந்தத் தகவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் சூர்யாவும் விஜய், சிவகார்த்திகேயன் ரூட்டை ஃபாலோ செய்ய ஆரம்பித்துவிட்டாரோ என கேள்வி எழுப்பிவருகின்றனர்.

More from Filmibeat

Read more about: suriya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X