கமலுக்கு ரியல் வில்லனாக மாறிய சூர்யா?.. இந்தியன் 2வுக்கு போட்டியா எந்த படத்தை இறக்குறாரு பாருங்க!

சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் வில்லனாக சூர்யா கேமியோ ரோலில் நடித்திருந்தார். ஆனால், தற்போது கமல்ஹாசனின் இந்தியன் 2 படத்துக்கு ரியல் வில்லனாகவே சூர்யா மாறிவிட்டார் எனக் கூறுகின்றனர்.

அதற்கு காரணம் இந்தியன் 2 படத்துக்கு எதிராக சூர்யா தயாரித்துள்ள பிரம்மாண்ட திரைப்படம் வெளியாக காத்திருப்பது தான் என்றும் கமல்ஹாசன் ரசிகர்கள் தற்போது சோசியல் மீடியாவில் சூர்யாவின் முடிவுக்கு எதிராக கமெண்ட்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.

Kamal Haasan Suriya Indian 2 Akshay Kumar Sarfira Soorarai Pottru hindi remake sudha kongara vikram rolex

இந்தியன் 2 படம் பான் இந்தியா அளவில் ரிலீசாக உள்ள நிலையில் சூர்யாவின் படம் அதற்கு இடையூறாக நிச்சயம் இருக்கும் என்று கூறுகின்றனர். திடீரென சூர்யா கமல்ஹாசனுக்கு எதிராக மாறியது ஏன் என்கிற கேள்விகளும் எழுந்துள்ளன.

ரோலக்ஸ் சூர்யா: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சியில் ரோலக்ஸ் கதாபாத்திரத்தில் மிரட்டல் வில்லனாக போதைப்பொருள் கடத்தல் தலைவனாக சூர்யா நடித்திருப்பார். விக்ரம் 3 படத்தில் கமலுக்கும் சூர்யாவுக்கும் இடையே சண்டை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், கமலுக்கு ரியல் வில்லனாகவே மாறிவிட்டாரா சூர்யா என்கிற கேள்விகள் எழுந்துள்ளன.

சூரரைப் போற்று இந்தி ரீமேக்: சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா, அபர்ணா பாலமுரளி நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படம் தேசிய விருதுகளை குவித்தது. சிறந்த நடிகர், சிறந்த நடிகை என பல விருதுகளை அந்த படம் குவித்த நிலையில் அந்தப் படத்தின் இந்தி ரீமேக்கில் அக்ஷய் குமார் நடித்துள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள அந்த படத்தை சூர்யா தயாரித்துள்ளார். தற்போது சூரரைப் போற்று இந்தி ரீமேக் படமான சர்ஃபிரா படத்தின் ரிலீஸ் தேதியை சூர்யா வெளியிட்டுள்ளார்.

சர்ஃபிரா ரிலீஸ் தேதி: சூர்யா மற்றும் ஜோதிகாவின் தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டைன்மென்ட் தயாரிப்பில் சுதா கொங்கரா இயக்கியுள்ள சூரரைப் போற்று படத்தின் ஹிந்தி தீமைக்கான சர்ஃபிரா திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகும் என அறிவித்துள்ளனர்.

Kamal Haasan Suriya Indian 2 Akshay Kumar Sarfira Soorarai Pottru hindi remake sudha kongara vikram rolex

இந்தியன் 2வுடன் மோதல்: ஷங்கர் இயக்கத்தில் வெளியான 2.0 படத்தில் நடித்த அக்ஷய் குமார் தற்போது ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இந்தியன் 2 படத்துடன் தனது சர்ஃபிரா படத்தை வெளியிடும் முடிவுக்கு வந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூரரைப் போற்று திரைப்படம் ஓடிடியில் வெளியானாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. அக்‌ஷய் குமாருக்கு கம்பேக் படமாக இந்த படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியன் 2 படத்துடன் மோத சூர்யா திட்டமிட்டு இருப்பது தமிழ் சினிமா பிரபலங்களை ஷாக் ஆக்கியுள்ளது. இந்தி பெல்ட்டில் இந்தியன் 2 படத்துக்கு கடும் போட்டியை அக்‌ஷய் குமாரின் இந்த படம் உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் சூர்யா கமலுக்கு எதிராக தனது தயாரிப்பு படத்தை வெளியிடுவார் என யாருமே எதிர்பார்க்காத சூழலில் இப்படியொரு முடிவை எடுத்தது ஏன் என்கிற கேள்விகள் கிளம்பி உள்ளன. இந்த படத்தில் சூர்யாவும் கேமியோ ரோலில் வருவது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X