Actor Suriya: ரிலீசுக்கு தயாராகும் சூரரைப் போற்று இந்தி ரீமேக்.. சூர்யாவை பீட் செய்வாரா அக்ஷய்?

மும்பை: நடிகர் சூர்யாவின் அடுத்தடுத்த படங்கள் வெற்றிப்படங்களாக அமைந்து அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்து வருகின்றன. தான் ஏற்கும் கேரக்டருக்காக அதிகமான மெனக்கெடல்களை செய்துவரும் ஹீரோக்களின் வரிசையில் சூர்யாவும் தொடர்ந்து இடம்பெற்று வருகிறார். அந்த வகையில் அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் அவரது சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன் மற்றும் விக்ரம் படங்கள் வெளியாகி மாஸ் காட்டின. தற்போது சிவா இயக்கத்தில் கங்குவா படத்திலும் நடித்து முடித்துள்ளார் சிவா. வரலாற்றுப் பின்னணியில் உருவாகியுள்ள இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது முடுக்கி விடப்பட்டுள்ளன.

கங்குவா படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ போன்றவை முன்னதாக வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து படத்தின் ரிலீசுக்காக காத்திருக்க வைத்துள்ளன. படம் ஆகஸ்ட் மாதத்தையொட்டி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங்கை முடித்துவிட்டு தற்போது சுதா கொங்கரா இயக்கத்தில் இணையவுள்ளார் சூர்யா. இதனிடையே தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த படங்களை கொடுத்து வருகிறார். கார்த்தி நடிப்பில் கார்த்தி 27 படத்தை தயாரித்துவரும் சூர்யா, பாலிவுட்டில் சூரரைப் போற்று படத்தின் இந்தி ரீமேக்கை தயாரித்து முடித்துள்ளார்.

Suriyas Soorarai Pottru Hindi remake movie titled Start Up movie release update is here

நடிகர் சூர்யா: நடிகர் சூர்யா நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அடுத்தடுத்த சிறப்பான படங்களை கொடுத்து வருகிறார். இவரது நடிப்பில் சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், விக்ரம் படங்கள் அடுத்தடுத்து வித்தியாசமான ஜானர்களில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வெற்றிப்படங்களாக மாறின. இந்நிலையில் தற்போது சிவா இயக்கத்தில் வரலாற்று பின்னணியில் உருவாகியுள்ள கங்குவா படத்தில் நடித்து முடித்துள்ளார் சூர்யா. கங்குவா என்றால் நெருப்பின் மகன் என்று அர்த்தம் என்று படக்குழு சார்பில் முன்னதாக கூறப்பட்டது. இந்த தலைப்பிற்கு ஏற்ப படத்தின் போஸ்டர்கள், கிளிம்ப்ஸ் வீடியோ போன்றவை வெளியாகி மிகப்பெரிய எதிர்பார்ப்பை ரசிகர்களிடையே ஏற்படுத்தியுள்ளது.

கங்குவா படம்: படம் ஆகஸ்ட் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்தில் சூர்யா 10க்கும் மேற்பட்ட லுக்கில் நடித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சூர்யாவிற்கு ஜோடியாக இந்தப் படத்தில் திஷா பதானி நடித்துள்ளார். வில்லனாக பாபி தியோல் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சமீபத்தில் அவரது பிறந்தநாளையொட்டி அவரது லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை மிரட்டியது. இதனிடையே படம் சர்வதேச அளவில் 10 மொழிகளில் ரிலீசாகவுள்ளதாகவும் முன்னதாகவே படக்குழுவினர் தெரிவித்திருந்தனர். இதையொட்டிய வேலைகளில் தற்போது படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

Suriyas Soorarai Pottru Hindi remake movie titled Start Up movie release update is here

தயாரிப்பாளர் சூர்யா: நடிகராகவும் தயாரிப்பாளராகவும் மாஸ் காட்டி வரும் சூர்யா, தற்போது தமிழில் தன்னுடைய தம்பி நடிப்பில் உருவாகிவரும் கார்த்தி 27 படத்தை 2டி என்டர்டெயின்மெண்ட் சார்பில் தயாரித்து வருகிறார். முன்னதாக தன்னுடைய நடிப்பில் வெளியாகி வரவேற்பை பெற்ற சூரரைப் போற்று படத்தை இந்தியில் அக்ஷய் குமார் நடிப்பில் தயாரித்துள்ளார். படத்திற்கு Start Up என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் நடிகர் சூர்யாவும் கேமியோ ரோலில் நடித்துள்ளார். இதனிடையே இந்தப் படம் வரும் ஜூலை 12ம் தேதி ரிலீசாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ள நிலையில் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக ராதிகா மதன் நடித்துள்ளார். தமிழில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது சூரரைப் போற்று. தேசிய விருதுகளையும் அள்ளியது. இதனிடையே இந்தப் படத்தில் சூர்யாவின் நடிப்பை அக்ஷய் எப்படி செய்துள்ளார் என்று அறிய ரசிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

சூர்யா தயாரிப்பில் ஸ்டார்ட் அப்: கங்குவா படத்தின் சூட்டிங்கை நிறைவு செய்துள்ள சூர்யா அடுத்ததாக இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா 43 படத்தில் கமிட்டாகியுள்ளார். அவரது சொந்தத் தயாரிப்பில் உருவாகவுள்ள இந்தப் படத்தில் அவர் கல்லூரி மாணவராக நடிக்கவுள்ளார். துல்கர் சல்மான், நஸ்ரியா உள்ளிட்டவர்களும் படத்தில் லீட் கேரக்டர்களில் நடிக்கவுள்ளனர். படத்தின் சூட்டிங் இம்மாத இறுதியில் அல்லது மார்ச் மாத துவக்கத்தில் துவங்கவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படங்களை தொடர்ந்து அடுத்தடுத்து கர்ணா, வாடிவாசல் படங்களிலும் சூர்யா நடிக்கவுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X