சூர்யாவிற்கு நல்ல நேரம் ஸ்டார்ட்.. கோவில் கோவிலா சுத்துனது வீண் போகல.. கோடியில் விற்பனையான படம்!
சென்னை: சூரரைப்போற்று, ஜெய்பீம் படத்திற்கு பிறகு சூர்யா நடித்த எந்த படமும் வெற்றியைப் பெற்றுத்தரவில்லை. கடந்த ஆண்டு வெளியான கங்குவா படம், பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது. ஆனால், அந்த படம் தோல்வித் திரைப்படமாக அமைந்த நிலையில், ரெட்ரோ படம் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் சூர்யா வெங்கி அட்லுரி படத்தில் கமிட்டாகி உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே ஒடிடி உரிமை பல கோடிக்கு விற்பனையாகி உள்ளது.
சூர்யா நடித்த கங்குவா படம் வெளியான முதல் நாளிலேயே கடுமையாக விமர்சத்திற்கு உள்ளாகி, சில வாரத்திலேயே தியேட்டரில் இருந்து தூக்கப்பட்டது. 500 கோடி செலவில் எடுக்கப்பட்ட கங்குவா படம் 200 கோடி கூட வசூல் செய்யாமல் தோல்வி திரைப்படமாக அமைந்தது. இதைத்தொடர்ந்து, நடிகை ஜோதிகா தனது கணவரை அழைத்துக்கொண்டு கர்நாடகா மாநிலத்தில் உள்ள கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். மேலும், அந்த கோவில் சண்டி யாகம் நடத்தியதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து ரெட்ரோ படம் வெளியாவதற்கு முன்பு, ஜோதிகா தனது கணவரை அழைத்துக்கொண்டு அஸ்ஸாம் மாநிலம் குவஹாத்தியில் உள்ள காமாக்யா கோயில் சாமி தரிசனம்.
ரெட்ரோ: இதைத்தொடர்ந்து, ரெட்ரோ படம் மே 1ந் தேதி வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது. கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய இப்படத்தில், பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ் , ஜெயராம், நாசர் , பிரகாஷ்ராஜ், சுஜித் சங்கர், சுவாசிகா, சிங்கம் புலி, கருணாகரன், நந்திதா தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கும் இத்திரைப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் மற்றும் ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இப்படம் நல்ல வசூலை அள்ளி வருவதால், சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.

பல கோடிக்கு விற்பனை: இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் சூர்யா ஆர்.ஜே.பாலாஜி இயக்கி வரும் படத்தில் நடித்து வருகிறார். அதில் சூர்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா கமிட்டாகி உள்ளார். ஸ்வாசிகா, யோகி பாபு, ஷிவதா, இந்திரன்ஸ், நட்டி சுப்பிரமணியம், சுப்ரீத் ரெட்டி ஆகியோர் நடித்து வருகின்றனர். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்து வரும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையிலுள்ள பிரசாத் ஸ்டுடியோவில் படமாக்கப்பட்ட வருவதாக கூறப்படுகிறது. இந்த படத்தை தொடர்ந்து, வெற்றி மாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், வெங்கி அட்லுரி படத்தில் கமிட்டாக உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பே இன்னும் தொடங்காத நிலையில் அந்த படத்தின் ஒடிடி உரிமையை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளம் ரூ85 கோடிக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. வெங்கி அட்லுரி இயக்கிய லக்கி பாஸ்கர் நெட்ப்ளிக்ஸில் பெரும் வரவேற்பை பெற்றால், இப்படமும் நிச்சயம் வெற்றி பெரும் என்பதை மனதில் வைத்துக்கொண்டு படப்பிடிப்பிற்கு முன்னதாகவே படத்தின் உரிமையை நெட்ப்ளிக்ஸ் வாங்கி உள்ளது. இந்த செய்தி இணையத்தில் கசிந்ததைத் தொடர்ந்து, சூர்யாவின் ரசிகர்கள் சூர்யாவிற்கு நல்ல நேரம் ஆரம்பாகிவிட்டது என்றும், ஜோதிகா கோவில் கோவிலாக சுத்தியது வீண் போகவில்லை என கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











