சூர்யாவின் வாடிவாசல் ட்ராப்பெல்லாம் ஆகவில்லை.. எப்போ ஷூட்டிங் தொடங்குது தெரியுமா?

சென்னை: சூர்யா நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்துவிட்டது. சிவா அந்தப் படத்தை இயக்கியிருந்தார். அடுத்ததாக சூர்யாவின் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படம், ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படம் வரவிருக்கின்றன. இதற்கிடையே வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் நடிக்க கமிட்டானார் சூர்யா. ஆனால் அந்தப் படத்தின் அடுத்தக்கட்ட நகர்வு என்னவென்றே தெரியாமல் இருந்தது.

சூர்யா தமிழ் சினிமாவின் நல்ல நடிகர் என்று பெயர் எடுத்தவர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு கங்குவா திரைப்படம் கடந்த மாதம் வெளியானது. ஞானவேல் ராஜா தயாரிக்க சிவா இயக்கியிருந்தார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் திஷா பதானி, கருணாஸ், போஸ் வெங்கட், நட்டி நடராஜ், யோகிபாபு, ரெடின் கிங்ஸ்லி என நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. படம் பற்றி ஞானவேல் ராஜாவும், சூர்யாவும் பேசி பேசியே ரொம்ப ஹைப் ஏற்றி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

suriya vaadivaasal vetrimaaran

2,000 கோடி ப்பே: அதாவது ஒரு பேட்டியில் பேசியிருந்த ஞானவேல் ராஜா இந்தப் படம் கண்டிப்பாக இரண்டாயிரம் கோடி ரூபாய் வசூலிக்கும்; இதன் இரண்டாவது பாகத்துக்கு போட்டியாக யாரும் படத்தை களமிறக்கமாட்டார்கள் என்றெல்லாம் பேசி வைத்தார். சூர்யாவும், இந்தப் படத்தை பார்க்கும்போது அனைவரும் வாயை பிளந்து பார்ப்பார்கள் என்றும் கூறியிருந்தார். இதனை கவனித்த பேச்செல்லாம் ஓவரா இருக்குதே எப்படியாவது படம் தப்பித்துவிடுமா என்று அச்சம் கொண்டிருந்தனர்.

மோசமான தோல்வி: அந்த அச்சப்படியே படம் தப்பிக்கவில்லை. மாறாக ரசிகர்களிடம் மாட்டி சின்னாபின்னமானது. சிவா, சூர்யா, ஞானவேல் ராஜா என பலரையும் வைத்து செய்துவிட்டார்கள். முக்கியமாக இவர்கள் பேசிய பேச்சுக்கு படத்தில் எதுவுமே இல்லையே; சூர்யாவை சிவா காவு வாங்கிவிட்டார் என்று ஓபனாக அடித்தனர். 200 கோடி ரூபாய்கூட படம் வசூலிக்கவில்லை. இதனால் சூர்யாவும், படக்குழுவும் உச்சக்கட்ட அப்செட் அடைந்திருந்தனர். ஜோதிகாவும் இதில் சம்பந்தமே இல்லாமல் சிக்கினார்.

அடுத்த படங்கள்: ஏனெனில் கங்குவா விமர்சகர்களை விமர்சிக்கிறேன் என்கிற பெயரில் ஜோதிகா இதில் மாட்டிக்கொண்டார். சூழல் இப்படி இருக்க கங்குவா திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் சில நாட்களில் வரவிருக்கிறது. இப்படி கங்குவா சூர்யாவுக்கு பெருத்த அடியை கொடுத்துவிட்டது. அடுத்ததாக அவர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். மேலும் ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் ஒரு படத்திலும் நடித்துவருகிறார். இதில் அவருக்கு திரிஷா ஜோடி.

வாடிவாசல்: இதற்கிடையே அவர் வெற்றிமாறன் இயக்கத்தில் வாடிவாசல் படத்தில் கமிட்டானார். படத்தின் டெஸ்ட் ஷூட்டும் நடந்தது. ஆனால் என்ன நடந்ததோ தெரியவில்லை படத்தின் ஷூட்டிங் இன்னமும் தொடங்கவில்லை. இடையில் படம் ட்ராப்பாகிவிட்டதாகவும் ஒரு தகவல் ஓடியது. இந்நிலையில் படம் பற்றிய புதிய தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி இந்தப் படம் ட்ராப் ஆகவில்லை என்றும்; மதுரையில் பிப்ரவரி மாதத்திலிருந்து ஷூட்டிங் தொடங்கும் என்று கூறப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X