இன்னொரு 300 கோடி வசூலுக்கு பிளான் போட்ட சூர்யா.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ரிலீஸ் எப்போ தெரியுமா?
சென்னை: நடிகர் சூர்யா மற்றும் இயக்குநர் வெங்கி அட்லூரி கூட்டணியில் உருவாகியுள்ள 'விஸ்வநாத் & சன்ஸ்' திரைப்படம், ஆகஸ்ட் 14 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகிறது. குடும்ப உணர்வுகள், நகைச்சுவை, மனதை நெகிழ வைக்கும் தருணங்கள் நிறைந்த முழுமையான குடும்பப் பொழுதுபோக்கு இது.
வெங்கி அட்லூரி இயக்கும் இப்படத்தை சூர்யதேவர நாக வம்ஷீ, சாயி சௌஜன்யா தயாரித்துள்ளனர். டீசர்-தலைப்பு வெளியானது முதலே பெரும் எதிர்பார்ப்பு. சூர்யா குழந்தையுடன் இடம்பெற்ற ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள், வசீகர நடிப்பால் குடும்ப ரசிகர்களிடையே உடனடி வரவேற்பைப் பெற்றன.

'வாத்தி', 'லக்கி பாஸ்கர்' வெற்றிகளைத் தொடர்ந்து, வெங்கி அட்லூரி 'விஸ்வநாத் & சன்ஸ்' மூலம் உணர்ச்சிபூர்வ குடும்பக் கதைசொல்லலுடன் ஃபீல் குட் என்டர்டெய்னரை வழங்குகிறார்.
மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன் உள்ளிட்டோர் முன்னணி வேடங்களில். ஜி.வி. பிரகாஷ் குமார் இசை, நிமிஷ் ரவி ஒளிப்பதிவு, நவீன் நூலி படத்தொகுப்பு, பங்களன் தயாரிப்பு வடிவமைப்பு.
'விஸ்வநாத் & சன்ஸ்' இந்த ஆண்டின் மிக எதிர்பார்க்கப்பட்ட குடும்பப் படம். தமிழ்நாட்டில் திங்க் ஸ்டூடியோஸ் விநியோகிப்பதால், வலுவான வெளியீடு உறுதியாகிறது. ஆகஸ்ட் 14 அன்று குடும்பத்துடன் திரையரங்குகளில் சூர்யாவின் இப்படத்தைக் கொண்டாடுங்கள்.
சூர்யாவின் கருப்பு திரைப்படம் 300 கோடி வசூலை நெருங்கியுள்ள நிலையில், இந்த ஆண்டு சுதந்திர தினத்துக்கு இன்னொரு 300 கோடி வசூல் படத்தை சூர்யா கொடுக்கப் போவது உறுதி என ரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications