சூர்யாவின் ‘விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்‘ படத்தின் முதல் பாடல் அப்டேட்!

சென்னை: நடிகர் சூர்யாஇ ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்திருந்த 'கருப்பு' திரைப்படம் தியேட்டர்களில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றதோடு, பாக்ஸ் ஆபீஸிலும் வசூல் சாதனை படைத்தது. இந்த பிரம்மாண்ட வெற்றியைத் தொடர்ந்து, சூர்யா தனது 46-வது திரைப்படமாகப் பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் நாக வம்சியின் சித்தாரா என்டர்டெய்ன்மெண்ட்ஸ் தயாரிப்பில் இணைந்துள்ளார். 'வாத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழில் முத்திரை பதித்த இயக்குநர் வெங்கி அட்லூரி 'விஸ்வநாதன் அண்ட் சன்ஸ்'
படத்தை இயக்கியுள்ளார். மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள இத்திரைப்படம் வரும் ஆகஸ்ட் 14-ஆம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு தியேட்டர்களில் வெளியாக உள்ளது.

'பட்டாம்பூச்சி' பாடல்: திரைப்படம் வெளியாக இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், படத்தின் மாஸான புரொமோஷன் பணிகளைப் படக்குழுவினர் சற்று முன் தொடங்கியுள்ளனர். அதன் முதல் கட்டமாக, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான 'பட்டாம்பூச்சி' பாடல் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகி இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. இயக்குநர் மற்றும் பாடலாசிரியரான அருண்ராஜா காமராஜின் எதார்த்தமான வரிகளில், பாடகி சுபலாஷினியின் காந்தக் குரலில் இந்த மெலடி பாடல் உருவாகியுள்ளது. ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசை, இந்தப் பாடலைக் கேட்ட உடனே முணுமுணுக்க வைக்கும் வகையில் அமைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.

நட்சத்திரப் பட்டாளம்: இத்திரைப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து 'பிரேமலு' திரைப்படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் சென்சேஷனலாக மாறிய இளம் நடிகை மமிதா பைஜு கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் மூத்த நடிகை ராதிகா சரத்குமார், பாலிவுட் பிரபலம் ரவீனா டாண்டன் மற்றும் பவானி ஸ்ரீ ஆகியோர் மிக முக்கியமான மற்றும் அழுத்தமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'கருப்பு' திரைப்படத்தின் தொடர் வெற்றியைத் தக்கவைத்துக் கொள்ளும் நோக்கில், முற்றிலும் மாறுபட்ட ஒரு குடும்பக் கதைக் களத்துடன் வெங்கி அட்லூரி - சூர்யா கூட்டணி ஆகஸ்ட் 14 அன்று தியேட்டர்களில் 'பிளாஸ்ட்' செய்யக் காத்திருக்கிறது.

Read more about: suriya சூர்யா
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X