Suryavamsam Papa: பாயாசம் சாப்புடுங்க Friend.. நம்ம சின்ராசு குழந்தை இவ்வளவு வளர்ந்துடுச்சா!

சென்னை: இயக்குநர் விக்ரமன் இயக்கத்தில் சரத்குமார் இரட்டை வேடங்களில் நடித்து வெள்ளி விழா கண்ட படம் சூரிய வம்சம். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் தேவயானி, மணிவண்ணன், ராதிகா, நிழல்கள் ரவி, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளார்கள். படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைக் குவித்தது. பல விருதுகளையும் குவித்தது. குறிப்பாக தமிழ்நாடு அரசு சார்பில் முதன் முதலாக சிறந்த வில்லன் விருதினை ஆனந்தராஜ் இந்த படத்திற்காக பெற்றார். இந்த படத்தில் சரத்குமார் தேவயானியின் மகனாக சக்திவேல் கதாபாத்திரத்தில் நடித்த ஹேமலதாவின் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

1997 ஆம் ஆண்டு வெளியான சூரிய வம்சம் படம் தமிழ் சினிமாவின் மணி மகுடம் எனக் கூறலாம். எவர் கிரீன் ஃபீல் குட் மூவி. பல இயக்குநர்கள் சூரிய வம்சம் படம் போல காலத்திற்கும் பெயர் சொல்லும் படங்களை எடுக்க முயற்சித்து வருகிறார்கள். படத்தின் முதல் காட்சியான " ஏய் வாத்து.. வாத்து.." காட்சியில் தொடங்கி, கிளைமாக்ஸில் " மரிக்கொழுந்து வாசம்" வசனம் வரை மொத்த படமுமே பிரமாதம்.

படத்தின் கதை, கதாபாத்திர வடிவமைப்பு, திரைக்கதை, நடிப்பு என எல்லாம் 10க்கு 10 மார்க் வாங்கினால், படத்தின் தரத்தை பல மடங்கு உயர்த்தியது எஸ்.ஏ. ராஜ்குமாரின் பின்னணி இசையும் பாடல்களும். இவரது இசைக்கும் பின்னணி இசைக்கும் 100க்கு 108 போடலாம். படம் வெளியான சில மாதங்களுக்குப் பின்னர் அதிகப்படியான வசன கேசட்கள் விற்பனையானது.

பாயாசம் சாப்புடுங்க ஃபிரண்ட்: இந்த படத்தில் பலரது கவனத்தை ஈர்த்த கதாபாத்திரம் சரத்குமார் மற்றும் தேவயானியின் குழந்தையாக நடித்த கதாபாத்திரம்தான். படத்தில் ஆண் குழந்தை, பெயர் சக்திவேல் என்றால், அவர் ஆண் குழந்தை இல்லை பெண் குழந்தை என்பது பலருக்கும் பின்னாளில் தான் தெரியவந்தது. ப்ரீ கிளைமாக்ஸ் காட்சியில், சரத்குமாரை நோக்கி பாயாசம் சாப்புடுங்க ஃபிரண்ட் எனக் கூறும் வசனம் இன்றைய மீம் கிரியேட்டர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்ற டெம்ப்ளேட்.

Suriyavamsam Hemalatha Photos Goes Trending Who Was Acted as Sarathkumar Baby in Suriyavamsam
Photo Credit:

சின்ராசு குழந்தை: இந்த காட்சியில் நடித்தவர் ஹேமலதா. தற்போது இவர் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட்டுக் கொண்டும் தனது அன்றாட நடவடிக்கைகளை பகிர்ந்து கொண்டும் உள்ளார். இது மட்டுமல்லாமல் இன்ஸ்டாகிராமில் இன்ஃபுளியன்சராகவும் உள்ளார். தீவிர முருக பக்தரான இவர் சமய புரத்தில் உள்ள முருகன் கோயிலுக்குச் சென்று வழிபட்டுள்ளார். அப்போது அங்கு எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளார். இது மட்டுமல்லாமல் கோவிலில் அவருடன் பலரும் புகைப்படம் எடுத்துக் கொண்டார்கள். அதுதொடர்பான புகைப்படங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளார். இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. இவரைப் பார்த்த பலரும் சூர்யவம்சம் சின்ராசு குழந்தை இவ்வளவு வளர்ந்துடுச்சா? என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X